புலிகளுக்கு பாதை காட்டியதாக கூறி முதியவரும் அநுராதபுரம் சிறையில் – அனந்தி தகவல்

விடுதலைப் புலிகளுக்குப் பாதை காட்டினார் என்ற குற்றச்சாட்டில் 66 வயதான முதியவரொருவரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பன்னிரண்டாயிரம் விடுதலைப்புலிகளை குடும்பங்களுடன் இணைத்துள்ள அரசாங்கத்திற்கு 160 பேரை விடுவிப்பது என்பது பாரதூரமான பிரச்சினையல்ல.தயா மாஸ்டர், கருணா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பாவி அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது?

கடந்த 14 நாட்களாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வரும் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
கூட்டமைப்பின் தலைவர் இது சம்பந்தமாக உடனடியாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்க முன்வர வேண்டும்.
160 அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிப்பது சாத்தியமில்லாது போனால் கட்டம் கட்டமாகவேனும் சில மாதங்களில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

About காண்டீபன்

மறுமொழி இடவும்