அரசியல் கைதிகள் விவகாரம்:மைத்திரியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் – மாவை

அனுராதபுரம் சிறையில் உணவு இன்றி இருக்கும் 3 அரசியல் கைதிகளையும் வைத்தியசாலையில் சென்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ. சேனாதிராயா நேற்று பார்வையிட்டு குறித்த விடயம் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்தார்.

அனுராதபுரம்சிறையில் உள்ள 3 அரசியல் கைதிகள் தொடர் உணவு இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மூவரும் தற்போது அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை வைத்தியசாலையில் சென்று பார்வையிடப்பட்டது.

இந்த நிலையில் குறித்த கைதிகளின் விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் தெரிவித்த கருத்தினை எம்மாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனை அவர்களிடம் எடுத்துக்கூறியதோடு நாளைய தினம் நாடு திரும்பும் ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு இதற்கான முடிவை பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஒரு சாட்சிக்குப் பாதுகாப்பில்லை என சட்டமா அதிபர் கூறும் நிலையில்தானா இன்னமும் இந்த நாடு உள்ளது. என்கின்ற கேள்வியும் எழுகின்றது. சாட்சிக்குப் பாதுகாப்பு இல்லையெனில் பாதுகாப்பு அளிக்கவேண்டியது அரசின் கடமை மாறாக அதனை ஓர் காரணமாக கூறமுடியாது. எனவே குறித்த அரசியல் கைதிகளின் வழக்கினை அனுராதபுரத்திற்கு மாற்றும் முயற்சியை தடுப்பதற்கான சகல முயற்சிகளும் இடம்பெறும் . என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்