17 வருடங்கடந்தும் வெடிக்கும் மிதிவெடிகள்!

மக்கள் மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்ட மறவன்புலவுப்பகுதியில் இரண்டாயிரமாம் ஆண்டு காலப்பகுதியினில் புதைக்கப்பட்ட மிதிவெடி வெடித்துள்ளது.சுமார் 17வருடங்களின் பின்னரும் அது வெடிக்கும் நிலையினிருந்தமை மீள்குடியமர்ந்த மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

நேற்று அதிகாலை மேய்ச்சலிற்குச் சென்ற வளர்ப்பு மாடு ஒன்று மிதிவெடியில் அகப்பட்டதில் குறித்த மாட்டின் ஓர் கால் மிகவும் மோசமாக சிதவடைந்திருந்தது. குறித்த மிதிவெடியில் அகப்பட்டு கணபதிப்பிள்ளை நகுலராசா என்பவரின் வளர்ப்பு மாடே ஓர் காலை இழந்துள்ளது.

வீட்டின் பின்பக்கமாகவே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு வெடிப்பு இடம்பெற்ற மறவன்புலவுக் கிராமம் 1999ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரை படையினரின் பிடியினில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்திருந்தது.விடுதலைப்புலிகள் நடத்திய தரையிறக்க நடவடிக்கையின் போதே அப்பகுதியினில் படையினரால் மிதி வெடிகள் புதைகப்பட்டிருந்தது. இதன் பின்னர் மக்கள் மீளக்குடியமர்ந்த வேளை அரச சார்பற்ற மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்று கண்ணிவெடி அகற்றும் பணியை இப் பகுதிகளில் மேற்கொண்டிருந்தது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*