அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலரைச் சந்தித்தார் மங்கள

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலர் தோமஸ் சானொனை, சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர வொசிங்டன் சென்றுள்ளார்.

அவர் நேற்று முன்தினம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலர் தோமஸ் சானொனைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் நிதி அமைச்சரின் மூத்த ஆலோசகர் மனோ தித்தவெல மற்றும் சிறிலங்கா தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அதேவேளை, அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான இரண்டாவது கூட்டுக் கலந்துரையாடலில் பங்கேற்க, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் அடுத்த மாதம் கொழும்பு வரவுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்காக, 2016ஆம் ஆண்டு, மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக பதவியில் இருந்த போது, ஆண்டு தோறும் இந்தக் கலந்துரையாடலை நடத்த இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா தோளோடு தோள் கொடுத்து துணை நிற்கும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் தெற்கிழக்காசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர், கேணல் ஜோசப்
இலங்கைக்கு பயணம்மேற்கொண்டுள்ள ஐநாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமை விசேட நிபுணர் பப்லு டி கிரீப் இன்று

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*