திட்டமிட்டபடி நாளை பூரண கதவடைப்பும் ஆளுனர் அலுவலகம் முன் போராட்டமும் இடம்பெறும்

அனுரதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை 13-10-2017 அன்று பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில்
திட்டமிட்டவாறு வடமாகாணம் முழுவதும் பூரண கதவடைப்பு நடைபெறும் என்பதுடன் வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக எதிர்ப்புப் போராட்டமும் இடம்பெறும்.
ஆளுனர் அலுவலகம் முன்பாக பொது மக்களை காலை 9.00 மணியளவில் ஒன்றுகூடுமாறும் அழைக்கின்றோம்.

கதவடைப்பு நடைபெறும்போது அவசர வைத்திய தேவைகளுக்காக செல்லும் பொது மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துதல் இ ரயர்களை எரித்தல் போன்ற செயற்பாடுகளில் எவரும் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்வரும் மைத்திரி மற்றும் சம்பந்தனுக்கு எதிராகவும் போராட்டம் இடம்பெறும். அது பற்றிய பொது அமைப்புக்களின் கூட்டறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழர் தாயகத்தில் குறிப்பாக வட மாகாணத்தில் கடையடைப்பு போராட்டம் என்பது மாதாந்த விடுமுறை போன்று அடிக்கடி நிகழும் ஒன்றாகிவிட்டது. அந்த
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய
“தீவிரம்”என்ற சொல் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. தான் ஒரு மிதவாதி அல்லது மத்திமவாதி என்று தன்னைக் கருதுபவர் தனது கொள்கைகளை

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*