வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் மட்டுமே நாம் முன்னேற முடியும் – சீனித்தம்பி யோகேஸ்வரன்

கிழக்கு மாகாணம் கல்வியில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதனால் வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் தான் கல்வியில் நாம் முன்னேற முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை சைவப்புலவர் கே.வி.மகாலிங்கம் சமூக அறக்கட்டளை அமைப்பின் நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் கல்குடா கல்வி வலயத்தில் 2016 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான வறிய மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு நேற்று (17) இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. அதில் கல்வியில் கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தில் காணப்படுகின்றது.

அதனால் தனிமையில் இருப்பதால் தான் வடக்கையும் கிழக்கையும் இணைக்குமாறு கோருகின்றோம்.

வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் கல்வியில் அனைத்து விடயங்களிலும் உயர்ந்து செல்வோம்.

சில இடங்களில் முன்னேற்றம் காணப்படுவதால் தான் நாங்கள் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

இதனால் தான் நீங்கள் கல்வியை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்