டென்மார்க்கில் நடைபெற்ற தமிழ் கலாச்சார மாலை

டென்மார்க்கில் கேர்ணிங் நகரில் 20.10.17 அன்று தமிழ் கலாச்சார மாலை மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தாயக மக்கள், டெனிஸ் மக்கள் மற்றும் டென்மார்க் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். நிகழ்வின் முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது .

அதன் பின்பு இன்று தாயக சமகால அரசியல் மற்றும் இன்று நல்லாட்சியில் மக்கள் அனுபவிக்கும் அவலங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

அத்துடன் தமிழ் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.பரதநாட்டியம், வயலின் இசை இதற்கான விளக்கமும் டெனிஸ்மக்களுக்கு கொடுக்கப்பட்டது. அத்துடன் தமிழர்களுடைய பாரம்பரிய உணவுகளும் பரிமாறப்பட்டது.

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையையும், ஆக்கிரமிப்புகளையும் தாங்கி நிற்கும் கண்காட்சியும் ,தமிழ் பாரம்பரிய பொருட்களும் கண்காட்சியில் காண்பிக்கப்பட்டது .

இந் நிகழ்வில் 10 டென்மார்க் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். முதல் முதலாக டென்மார்க்கில் தமிழர்களின் 30 வருட வரலாற்றில் அதிகூடிய அரசியல்வாதிகள் கலந்து கொண்ட நிகழ்வு இதுவாகும். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக நாம் இதைப்பார்கிறோம்.

ஒரே நேரத்தில் இந்த 10 அரசியல்வாதிகளும் தமிழர்களுடைய பிரச்சனைகளை ஒன்றாக கேட்டறிந்துள்ளனர். டெனிஸ் ஊடகங்களும் இந்நிகழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை பிரசுரித்துள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்