வவுனியாவில் முன்னாள் போராளிகளின் விபரங்களை திரட்டும் பொலிசார்!

வவுனியா கனகராஜன்குளம் பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களை பொலிசார் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2012 அன்று புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருடைய விபரங்களை பெறுவதற்காக நேற்று 27.10.2017 முற்பகல் உறவினருக்கு கனகராஜன்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசியில் அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது குறித்த முன்னாள் போராளி எங்கு உள்ளார். என்ன தொழில் புரிகின்றார். திருமணமாகியுள்ளதா? போன்ற விபரங்களை கேட்டுப் பெற்றுள்ளதாக முன்னாள் போராளியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விபரங்களை பொலிசார் சந்தேக கண்ணோட்டத்துடன் விபரங்களைப் பெற்று வருவது எமக்கு தர்ம சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் போராளியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தொடுக்கப்பட்ட வழக்கில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத்த
முல்லைத்தீவு பெருங்காட்டு புகதியில் கண்டுபிடிக்கப்பட் விடுதலை புலிகளின் நிலத்தடி காவலரண் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கோப்பாப்புலவு புதுக்ககுடியிருப்பு பிரதான

About இலக்கியன்

மறுமொழி இடவும்