கட்டலோனியா தனிநாடாக பிரகடனபடுத்தப்பட்டது தவறு! இலங்கை கண்டனம்

கெட்டலோனியா பிராந்தியமானது ஸ்பெயினிலிருந்து விலகிச் செல்வதற்கான தனிநாட்டுப் பிரகடனம் தவறானது என்று இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வௌிநாட்டலுவல்கள் அமைச்சினால் கெட்டலோனியா விவகாரம் தொடர்பான கண்டன அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் நீண்டகாலமாக நட்புறவு நிலவி வருகின்றது.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஸ்பெயின் மிக முக்கியமான நாடாகும். அந்த வகையில் தனிநாட்டுப்பிரகடனம் செய்துள்ள கெட்டலோனியா பிராந்தியத்தின் தீர்மானம் குறித்து இலங்கை அரசாங்கம் எதுவித சமரசங்களுமின்றி வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கின்றது.

ஸ்பெயினின் ஒருமைப்பாடு தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்பதில் இலங்கை உறுதியாக உள்ளது.

ஸ்பெயின் நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஆள்புல ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், இருதரப்பும் இப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கம் வலியுறுத்துகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்