உயிரிழந்தவரின் நண்பனை அழைத்து கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ்குழு விசாரணை!

அரியாலை மணியம்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பில் இருந்து சென்ற விஷேட பொலிஸ்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இத் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நபருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றைய நபரினை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளையும் குறித்த
பொலிஸ் குழு மேற்கொண்டிருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மணியம் தோட்டப்பகுதியில் மோட்டார் சைக் கிளில் சென்ற இருவர் மீது இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து குறித்த இருவரையும் வழிமறித்து துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியிருந்தனர்.
இத் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் அதே இடத்தை சேர்ந்த தொன் போஸ்கோ ரிஸ்மன் என்ற இளைஞன் கொலை செய்யப்பட்டி ருந்தார்.

அத்துடன் அவருடன் மோட்டார் சைக்கிளினை செலுத்தி சென்ற நிஷாந்தன் என்ற இளைஞன் தப்பியிருந்தார். இச் சம்ப வம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய பொலி ஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

மேலும் குறித்த துப்பாக்கி சூட்டு தாக்கு தலை பொலிஸாரே மேற்கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டு பொதுவாக முன்வைக்க ப் பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக முப்படைகளினை சார்ந்தவர்களிடமும் விசாரணைகளானது மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்படி மண்டைதீவு கடற்படை முகாமி லும், பண்ணை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முகாமிலும் விசா ரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ் விசாரணைகளினூடாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரே இத் துப்பாக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்டிருந்தனர் எனவும் அவர்களது முகாமிலேயே இச்சம்ப வத்துடன் தொடர்புபட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி நிற்பதாகவும் ஊட கங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அத்து டன் குறித்த சம்பவத்தன்று சம்பவ பகுதியில் குறித்த இரு வாகனங்களும் பயணித்த சீசீ ரிவி காணொலியும் ஊடகங்களில் வெளியா கியிருந்தது.

இவ்வாறான நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டி ருந்தது. இதற்கமைவாக நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வந்தடைந்த குற்றப் புலனா ய்வு பிரிவின் குழுவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்படி நேற்றுமாலை சுமார் 3 மணி யளவில் இத் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவரை மோட்டார் சைக்கிளில் ஏற் றிச் சென்ற மற்றைய நபரான நிஷாந்தனிடம் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற் கொண்டதுடன் சம்பவம் நடைபெற்ற இடத்திலும், உயிரிழந்தவரின் வீட்டிற்கும் அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இவ் விசாரணை நடவடிக்கைகளானது மாலை 6 மணி வரை இடம்பெற்றிருந்த துடன் அதன் பின்னர் குறித்த நபரை அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்றிருந்தமையும் குறி ப்பிடத்தக்கதாகும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்