மாணவர் போராட்டத்தின் எதிரொலி விடுதிகளில் இருந்து மாணவர்களை வெளியே நிர்ப்பந்தம்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ் பல்கலைக் கழகத்திற்கு பூட்டுப்போட்டு மாணவர்கள் போராட்டம் நடத்திவருவதன் எதிரொலியாக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை வெறியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது…
மாணவர் போராட்டத்தையடுத்து யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பல்கலைக் கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரையும் நாளை புதன் கிழமை மாலை 4 மணியுடன் வெளியேற வேண்டுமென பல்கலைக் கழக நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று இரண்டாவது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஈழதேசம் இணையத்திற்காக தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்!

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்