சமஷ்டி என்ற சொல் நாட்டை பிளவுபடுத்தும் சொல் அல்ல : ராஜித

சமஷ்டி என்ற சொல் நாட்டை பிளவுபடுத்தும் சொல் அல்லவெனவும் அது அதிகாரங்களை பகிர்வது தொடர்பான சொல் மட்டுமே என உயர் நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமஷ்டி என்பது நாட்டை பிளவுபடுத்துவது அல்ல அதிகாரங்களை பகிர்வது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஒற்றையாட்சியும் அது போன்றுதான். ஆனால் சமஷ்டி என்ற சொல்லுக்கு இலங்கையில் தேவையில்லாத அச்சம் காணப்படுகின்றது. தமிழ் அரசியல்வாதிகளுக்கு சமஷ்டி என்ற பிரச்சினையால்தான் பெயர் இருக்கின்றது. ஆனால் உலகில் அப்படி எந்த பிரச்சினையும் கிடையாது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்