சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, பதில் உதவிச் செயலர் ரொம் வஜ்டா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், கொழும்பில் உள்ள அமெரிக்க துணை தூதுவர் ரொபேர்ட் ஹில்டனும் கலந்து கொண்டார்.

