முள்ளிவாய்க்காலில் கண்ணிவெடிகள் மீட்பு

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் இருந்து 50 கண்ணி வெடிகள் மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளரினால் மண் விவசாய நடவடிக்கைக்கான மண் தோண்டப்பட்டபோது, உரப்பை ஒன்றில் இருந்து இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த 50 கண்ணி வெடிகளும் நேற்று மாலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கும் பொலிஸார், மீட்கப்பட்டவுடன் இவைகள் செயழிழக்கச் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மிதிவெடிகள் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவையாக இருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றதோடு, அதில் பொது மக்கள் பலர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்