30 பேர் உயிரிழந்த வழக்கில் முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை!

பிலியந்தலை பஸ் தரிப்பிடத்தில் பஸ் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் மீதே இவ்வாறு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 30 பேர் பலியானதோடு, சுமார் 42 பேர் வரை காயமடைந்தனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில். குற்றவாளியாக இனங்காணப்பட்டவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க நேற்று ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
“விடுதலைப் போராட்டத்தில் இருந்த போது நாங்கள் ராஜாக்கள் போன்று சமூகத்தால் வரவேற்கப்பட்டோம்”இப்போது அனாதைகளாகப் பார்க்கப்படுகின்றோம். ஆனால் அதே சமூகத்தில் நல்லவர்களும்
விசுவமடு பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் இன்று திடீரென மரணமடைந்துள்ளார். விசுவமடுவின் குமாரசாமிபுரம், புன்னை நீராவியில் வசித்து வந்த மூன்று
வில்பத்து வனப்பகுதியில் கெப் வண்டி மீது கிளைமோர் குண்டு தாக்குதல் நடத்தி, மருத்துவர் உட்பட 7 பேரை கொலை செய்த

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*