தோல்வி பயத்தால் தேர்தலை நடத்த அரசு அஞ்சுகிறது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிக்கை!

அரசாங்கம் சிங்களப் பிரதேசங்களில் தேர்தலைநடாத்தப் பின்நிற்கின்றது. எங்கே தமதுபொருளாதாரக் கொள்கைகளும் தமிழர் சம்பந்தமானஉத்தேசஅரசியல் தீர்வுகளும் சிங்களமக்களிடையேதமக்கெதிரானஒருஅலையைஉண்டுபண்ணிவிடுவோமோஎன்றுபயப்படுகின்றனர் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரத்துக்கொருகேள்வி என்று வடக்கு மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பி வருகிறார். இதன்படி இந்தவாரம் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

கேள்வி–உள்ளுராட்சித் தேர்தல்களைத்தமிழ்ப் பிரதேசங்களில் மட்டும் வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகவும் இது பொதுமக்கள் வாக்கெடுப்புக்குமுன்னர் தமிழ் மக்களின் மனோநிலையைக்கைபிடித்துப் பார்க்கும் ஒருகைங்கரியம் என்றும் சிலரால் கூறப்படுகின்றதே. உங்கள் கருத்தென்ன?

பதில் – இது ஒருயூகந்தான். ஆனால் இக் கூற்றில் உண்மையிருக்கவுங் கூடும்.
அரசாங்கம் சிங்களப் பிரதேசங்களில் தேர்தலைநடாத்தப் பின்நிற்கின்றது. எங்கே தமதுபொருளாதாரக் கொள்கைகளும் ;தமிழர் சம்பந்தமானஉத்தேசஅரசியல் தீர்வுகளும் சிங்களமக்களிடையேதமக்கெதிரானஒருஅலையைஉண்டுபண்ணிவிடுவோமோஎன்றுபயப்படுகின்றனர்.

எனவேமுதலில் தமிழ் மக்களின் கருத்தைஅறியப்பார்க்கும் ஒருநிகழ்வாக இந்தஉள்ளுராட்சித் தேர்தல் நடைபெறலாம். அதாவதுபௌத்தத்திற்குமுதலிடம், சமஷ்டி தேவையில்லை, ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்றகொள்கையுடையதற்போதையதமிழ்த் தலைமைத்துவத்தின் கருத்தைதமிழ் மக்கள் வரவேற்பார்களானால் சிங்களமக்களுக்குஅதைஎடுத்துக்காட்டிபுதியஅரசியல் யாப்பைத் தாம் நினைக்கும் வண்ணம் பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்யலாம் என்றுஅவர்கள் எதிர்பார்க்கக்கூடும்.

ஆகவேதற்போதையதமிழ்த் தலைமைகளின் கருத்துக்களைத் தமிழ் மக்கள் உள்ளுராட்சித் தேர்தல்களில் ஏற்றுக் கொண்டுபெருவாரியாகஅக் கருத்துக்களைஆதரித்தாரானால்மிகக் குறைவானதீர்வைநாம் விரைவாகப் பெற இடமிருக்கின்றது. ஆனால் வருங்காலத்தில் தமிழ் மக்களுக்குஎன்னஆகும் என்பதைத் தமிழ்த் தலைமைகளும் தமிழ் மக்களும் ஆய்ந்துணரவேண்டும். கிழக்கைப் போல் வடக்கைஆக்குவதற்குஅரசாங்கத்திற்குபலவருடங்கள் அப்பொழுது தேவையில்லை.

சிலகட்சிகளும் தமிழ் மக்களின் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பேசுவதைவைத்துதமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ,வர்கள் பிளவைஏற்படுத்தப்பார்க்கின்றார்கள் என்றஒருகருத்துமுன்வைக்கப்படுகிறது. ,து எந்தஅளவுக்குஉண்மைஎன்றுஆராய்வோம்.
தமிழ் மக்களின் கொள்கைகளில்,நோக்கில்,முன்னேற்பாடுகளில்ஒருபுரிந்துணர்வும் ஸ்திரத் தன்மையும் இருக்கவேண்டும் என்றுதான் தந்தைசெல்வாகாலத்திலேயேசிலஅடிப்படைகள் வலியுறுத்தப்பட்டன.

அவையாவனதாயகம்,தன்னாட்சி,தமிழர் தரையிணைப்புஎன்பன. இதற்கு உகந்த தீர்வு சமஷ்டியேஎன்றுவலியுறுத்தப்பட்டது. இதனை 1949ம் ஆண்டுதொடக்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சிவலியுறுத்திவந்துள்ளது. தற்போதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இவற்றைவலியுறுத்துகின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பலகட்சிகளும் ,லங்கைத் தமிழரசுக் கட்சியின் நீண்டகாலஉறுப்பினர்களும் ஒருமித்து 1949ம் ஆண்டுதொடக்கம் வலியுறுத்தப்பட்ட கொள்கைகளையே பின்பற்றவேண்டும் என்றும் அவற்றில் இருந்துபிறழ்வதுதாம் இருந்தகாலத்தில் கட்சிக்காகத் தமதுகாணிபூமிகளைவிற்றுவறுமையில் மறைந்தமுன்னையதமிழ்த் தலைவர்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து உடலைவருத்திப்போராடியஎமது ,ளைஞர் சமுதாயத்திற்கும், போரினால் பாதிக்கப்பட்டஎமதுமக்களுக்கும் நாம் செய்யும் துரோகமாகமுடியும் என்றுகருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

,ந்தவகையில் தவறுஏற்பட்டுள்ளமைஎங்குஎன்றுபார்த்தால் 2009ம் ஆண்டின் பின்னர் ‘போரில் நாங்கள் தோற்றுவிட்டோம் நாம் கோருவதுகிடைக்காது;யதார்த்தஅடிப்படையில் ஏதோசிலசலுகைகளையேநாம் பெற்றுக் கொள்ளமுடியும்’என்றமனோபாவம் எம் தலைவர்கள் சிலரிடையேபுகுந்தமையே இதற்கானகாரணம் என்றுஅடையாளம் காணமுடியும். ஆகவே’போரில் தமிழர்கள் தோற்றுவிட்டார்கள்; இனிமேல் முன் போல் எமதுகோரிக்கைகளைமுன்வைக்கமுடியாது’ என்றஒருதோல்வி மனப்பான்மைச் சிந்தனைக்கானஅடிப்படைக் காரணமாகத் தோன்றுகின்றது.
,ந்தவகையில்த்தான் இராணுவத்தினரதும் சிலசிங்களத் தலைவர்களினதும் எண்ணங்களும் ,ருந்துவருவதைநாம் காணலாம். ‘போரில் நாம் தமிழர்களைவென்றுவிட்டோம். ஆகவேஅவர்களிடம் நாம் பறித்தகாணிகள் யாவும் எமக்குச் சொந்தம். இனித் தமிழர்கள் கோரும் எந்தக் கோரிக்கைகளுக்கும் நாம் செவிசாய்க்கத் தேவையில்லை.

நாமாகமனமுவந்துதருவதையேஅவர்கள் ஏற்கவேண்டும்’என்றுசிலர் கூறுவதைக் கேட்டுள்ளோம்.
ஓரிருவிடயங்களைநாம் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். ஆயுதமேந்தியோர் மத்தியஅரசைப் பிடிக்கஎத்தனிக்கவில்லை.

தாம் வாழ்ந்த இடங்களில் அரசைநிறுவவேமுயன்றனர். போர் நடந்தகாலத்தில் மத்தியஅரசாங்கஅதிகாரம் தொடர்ந்துவடக்குக் கிழக்கில் கோலோச்சியமையாவர்க்கும் நினைவிருக்கலாம். அரசஅலுவலர்கள் மத்தியஅரசாங்கத்தாலேயேசம்பளம் கொடுக்கப்பட்டார்கள். மத்தியஅரசின் நிகழ்ச்சிநிரலையேநடைமுறைப்படுத்தினார்கள். ஆகவேபோர் என்று கூறியது இரு இனங்களுக்கிடையேயானபோர் அல்ல. அதுஅரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்றஒன்று. முன்னர் பழைய ஜே.வீ.பி காலத்திலும் அப்படித்தான். அரசாங்கத்திற்கும் ஜே.வி.பி க்கும் ,டையிலேயேபோர் நடைபெற்றது.

எனவேவிடுதலைப் புலிகளின் வன்முறையும் ஜே.வீ.பியின் வன்முறையும் நாட்டில் நடந்த ரு கிளர்ச்சிகளேயொழியயுத்தம் அல்ல. அரசாங்கத்தின் அதிகாரம் தொடர்ந்துவடக்கிலும் தெற்கிலும் அந்தந்தக் காலத்தில் தொடர்ந்திருந்ததால் கிளர்ச்சிகளையுத்தம் என்றுஅடையாளப்படுத்தமுடியாது. ஆகவேகிளர்ச்சிமுடிவுக்குக்கொண்டுவந்ததும் இராணுவம் தமதுமுகாம்களுக்குச் சென்றுவிடவேண்டும். அவர்கள்கையேற்றகாணிகள் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும். அதுவும் அவர்களால் அன்றிசிவில் அரசாங்கஅதிகாரிகள் மூலமாகக் சேர்ப்பிக்கப்பட்டிருக்கவேண்டும். அதுதான் சட்டத்தின் எதிர்பார்ப்பு.

போர்க் காலத்தில் கையகப்படுத்தியகாணிகளைதொடர்ந்துஎட்டுவருடங்களுக்குவைத்துக் கொண்டுவிட்டுஅவைஎம்முடையவைஎன்று கூற இராணுவத்தினருக்குசட்டத்தில் இடமில்லை.
‘ஆகவே ,ராணுவத்தினர் போரில் வென்றார்கள்; எனவே எமக்குஎமதுசட்டரீதியானநியாயமானகோரிக்கைகளைஅதன் பொருட்டுஅரசாங்கத்திடம் முன்வைக்கஎந்தவிதஉரித்தும் இல்லை’என்றுஎம்மவர் நினைத்தால் அதுமுற்றிலுந்தவறானசிந்தனையாகும். தமிழ் மக்கள் போரில் தோல்விஅடையவில்லை. அவர்கள் அன்றும் இன்றும் இந்தநாட்டின் ஒருஅங்கமே. அவர்களின் சட்டரீதியானஉரிமைகளைத் திருப்பிக் கேட்கஎத்தருணத்திலும் அவர்களுக்குஉரித்துண்டு.

,ன்றையதமிழ்த் தலைமைத்துவம் தோற்றுவிட்டோம் என்றமனப்பாங்கில் பௌத்தத்துக்குமுதலிடம் கொடுக்கநாம் தயார்;ஒற்றையாட்சியின் கீழ் சிங்களப் பேரினவாதத்துக்குதொடர்ந்து இடம் கொடுக்கநாம் தயார்;வடகிழக்கை இணைக்காதுவிடநாம் தயார்;தன்னாட்சி,தாயகம் போன்றகோரிக்கைகளைக் கைவிடத் தயார்;சமஷ;டி முறைசாத்தியம் இல்லைஎன்று கூறிஒருசிலசலுகைகளைமட்டும் பெறும் வகையில் நடந்துகொள்வதால்த்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பிளவுஏற்படப் பார்க்கின்றது. அதாவதுநாமாகவேவலிந்துதயாரித்ததேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்கத்தைதான்தோன்றித்தனமாகக் கைவிடஎமதுதலைமைகள் முன்வந்தமையேபிளவுஏற்படஏதுவாக இருக்கின்றது.

பெரும்பான்மையானதமிழ்க் கட்சிகள் யாவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தைஒட்டியகருத்தையேதாம் கொண்டுள்ளனர்.ஆகவேஅந்தக் கொள்கைகளில் மாற்றமேதும் இல்லைஎன்றுதமிழ்த் தலைமைத்துவத்தால் உறுதியுடனும் நேர்மையுடனும் கூறமுடிந்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புதொடர்ந்தும் வலுவானஒருஅரசியல்க்கட்சியாகமுன்னேறமுடியும்.

அவ்வாறில்லாமல் குறைந்ததைப் பெறுவதேஉசிதம் என்றுஎமதுதொடர் அடிப்படைக் கருத்துக்களைஉதாசீனம் செய்தால் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கமுடியாது. ஆனால் அவ்வாறானகுறைந்தபட்சதீர்வுகளுக்கு இவ்வளவுதியாகங்களின் பின்னரும் எம்மவர்கள்உள்ளுராட்சித் தேர்தல்களின் போதுசம்மதம் தெரிவிப்பார்களானால் அரசாங்கம் தான் நினைத்தவாறுசிலசலுகைகளைஎம் மீதுதிணித்துவிட்டுஎமதுநீண்டகாலஅரசியல் பிரச்சனையைமழுங்கடிக்கஅதுஅனுசரணையாகஅமையும். அத்துடன் வடமாகாணமும் கிழக்குமாகாணம் போல் பறிபோய்விடும்.

உண்மையில் இவ்வாறானஉள்ளுராட்சிமன்றத் தேர்தலைவடகிழக்கில் மட்டும் வைக்கஅரசாங்கம் முன்வருமானால் அதுதமிழ் மக்களின் நாடிபிடித்துப்பார்க்கும் ஒருசெயற்பாடாகவேஅமையும். எனவேமக்கள் விழிப்பாக இருத்தல் அவசியம என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்