அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும்: கணேஷ்

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டும் என சமூக சேவையாளர் கணேஷ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக மையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீதித்துறையில் ஜனாதிபதி தலையிட முடியாது. அவரைத் தலையிட வேண்டும் என நாம் கோர முடியாது. நீதிமன்றத்தை நாடியே பெற வேண்டும்.

அரசியல் கைதிகள் குறித்த வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இவ்வழக்குக் குறித்த ஒரு சாட்சி வவுனியா வர சம்மதம் தெரிவித்துள்ளார். ஏனைய இரு சாட்சிகள் வெளிநாட்டில் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை அதனால் கால அவகாசம் வேண்டும் என சட்டமா அதிபர் சார்பில் மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

27ஆம் திகதி மேல் முறையீட்டு மன்று முடிவெடுக்கும் என எமது சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி எமக்கு வாக்குறுதி தந்துள்ளார்’ என கணேஷ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசியல் கைதிகளின் பெற்றோர் கருத்துத் தெரிவிக்கையில், ‘பெருங்குற்றம் செய்தவர்கள் வெளியில் இருக்கின்றார்கள். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் மகனின் உடல் நிலை மோசமாகியுள்ளது. கடுமையான நோய்கள் தோன்றியுள்ளன.

இதனால் அவர்களை விரைந்து விடுவிக்கவேண்டும். குடும்பச் சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு எமது பிள்ளைகளை விடுவிக்கவேண்டும்’ என மேலும் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்