சிறிலங்காவுடன் தோளோடு தோள் நிற்குமாம் அமெரிக்கா

சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா தோளோடு தோள் கொடுத்து துணை நிற்கும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் அமெரிக்காவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட பாடசாலை திறப்பு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பொருளாதாரத்தை மீளமைக்கவும், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியை முன்னகர்த்தவும், அனைவருக்கும் சம உரிமை, மனித உரிமைகள் மற்றும் சமவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும், சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா தோளோடு தோள் துணை நிற்கும்.

அமெரிக்காவின் இந்த ஒத்துழைப்பு சிறிலங்காவின் நல்லிணக்கம் மற்றும் ஒருமைத்துவத்துக்கான உதவியின் ஒரு அங்கமாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தேசிய சமயங்களுக்கான மாநாடு
தற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், அதன் தலைவர்களையும் ஒரு
அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இது

About காண்டீபன்

மறுமொழி இடவும்