இலங்கையின் தேசியக் கொடியை நாங்களும் விரும்பவில்லை-சுத்துமாத்து சுமந்திரன்

இலங்கையின் தேசியக் கொடியை தாங்களும் விரும்பவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, வடமாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்திருந்தார்.

இதுதொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு கருத்துகள் வெளியாக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்த எமது செய்தி சேவைக்கு இன்று காலை கருத்து தெரிவித்த சுமந்திரன், தேசியக் கொடிக்கு மறுப்புத் தெரிவித்து போலி தேசியவாதத்தை வெளிப்படுத்த சிலர் முனைவதாக குற்றம் சுமத்தினார்

தேசியக்கொடி குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அதிருப்தி இருக்கின்ற போதும், ஒருநாட்டின் தேசிய கொடியாக அது இருக்கும் வகையில், அதற்கு உரிய மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்றும் சுமத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின் போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று
இலங்கை ஆட்சியாளா்களுடன் இணைந்த அமைச்சு பதவிகளை பெறுவது தொடா்பா க தமிழ்தேசிய கூட்டமைப்பு சிந்திக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளும
தனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து

About காண்டீபன்

மறுமொழி இடவும்