ஆர்.கே.நகர் தேர்தல்:டிசம்பர் 31-க்குள் நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் ஏராளமான போலி வாக்காளர்கள் இருப்பதால், அவர்களை நீக்கிய பிறகே தேர்தல் நடத்த வேண்டும் என திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 45,819 போலி வாக்காளர்களை நீக்கியதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான ஆவணங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் நாளை பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் சார்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.

திமுகவின் கோரிக்கை படி போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டதால் ஏற்கனவே உள்ள உத்தரவுபடி டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே ஆர்.கே.நகர் தேர்தல் பணிகளைத் தற்போது தேர்தல் ஆணையம் தொடங்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்