முன்னாள்போராளியை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு

மன்னார் – எருக்கலம் பிட்டி 5ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் என அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மன்னார் எருக்கலம் பிட்டி 5ஆம் கட்டை பகுதியில் வசித்து வரும் 40 வயதான இராசையா குகனேஸ்வரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியே காணாமல் பேயுள்ளார்

கடந்த 13 ஆம் திகதி மேசன் வேலைக்காக மன்னார் சென்ற தனது கணவர் இது வரை வீட்டிற்கு வரவில்லை என அவரது மனைவி தெரிவித்தார்.

தனது கணவர் கடந்த 2013 ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டவர் என மனைவி தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடந்த 6 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி இன்று (புதன்கிழமை) திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின்
பிலியந்தலை பஸ் தரிப்பிடத்தில் பஸ் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவரின் ஹோட்டலுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற ஐந்து இலங்கை காவல்துறையினர் அங்கு பணி

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*