வடமராட்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னம் தாங்கிய சுவரொட்டிகள்!

தமிழீழ விடுதலைப் புலிகளிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் வடமராட்சியின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

எனினும் இன்று காலையில் அவை அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­ னின் பிறந்­த­நாள், தமி­ழர் தாயக மண்­ணி­லும், புலம் பெயர் தேசங்­க­ளி­லும் நாளை கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது.

1954ஆம் ஆண்டு வல்­வெட்­டித்­து­றை­யில் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன் பிறந்­தார். தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கம் செயற்­பட ஆரம்­பித்த பின்­னர், தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னின் பிறந்த நாள் பெரும் எடுப்­பில் கொண்­டா­டப்­பட்டு வரு­வது வழ­மை­யா­கும். ஆயு­தப் போர் தாயக மண்­ணில் மௌனிக்­கும் வரை­யில் பகி­ரங்­க­மாக பிறந்த நாள் கொண்­டா­டப்­பட்­டது.

அதன் பின்­னர் தாயக தேசத்­தில், பாது­காப்­புத் தரப்­பின் கண்­ணில் மண்­ணைத் தூவி இர­க­சி­ய­மான இடத்­தில் கொண்­டா­டப்­பட்டு வந்­தது. ஆனால் புலம்­பெ­யர் தேசங்­க­ளில் மிகப் பெரும் எடுப்­பில் கொண்­டா­டப்­பட்டு வந்­தது.

இந்த ஆண்டு, தாயக மண்­ணி­லும், புலம்­பெ­யர் தேசங்­க­ளி­லும் பிறந்த நாள் கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது. நள்­ளி­ரவு 12 மணிக்கு கேக் வெட்டி, பட்­டாசு கொழுத்தி இந்­தக் கொண்­டாட்­டம் ஆரம்­பிக்­கும்

About இலக்கியன்

மறுமொழி இடவும்