கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு சிறப்பு ஏற்பாடு

சிறிலங்கா படையினரின் எதிர்ப்பையும் மீறி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் நாளை (27) மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மிகத் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.

தற்போது யாழ். குடாநாட்டில் மழை பெய்துவருகின்ற போதிலும், மழைக்கும் மத்தியிலும் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இந்தச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழீழ மாவீரர் தினத்தை இம்முறை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக நடத்துவது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முடிவெடுத்து இன்று காலை அங்கு அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டனர்.

தமிழீழ தேசிய வர்ணங்களான சிவப்பு, மஞ்சல் கொடிகளால் பிரதான வீதியும் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாகவும் அலங்கரிக்கப்பட்டன.

இதன்போது அங்கு சென்ற படையினர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருடன் முரண்பட்டதுடன் மேலதிக படையினரும் பொலிஸாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. எனினும் சிறிது நேரத்தின் பின்னர் அது முடிவுக்கு வந்தது. வீதிக்கு மேலாக மாவீரர் வளைவு அமைப்பதற்கு அனுமதி பெறப்பட வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து பிரதான வீதிக்கு மேலாக கட்டப்படவிருந்த வளைவு மாவீரர்களுக்கு சுடர் ஏற்றும் நினைவிடத்தில் வைத்து அலங்காரப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

நாளை மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன், கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருடன் இணைந்து இங்கு மாவீரர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தவுள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டின் இதே நாளில், கடல்வள ஆராட்சியில் ஈடுபட்டிருந்தவேளை
சிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை அடுத்து, அலரி மாளிகையில் ஐதேகவின் நாடாளுமன்ற
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*