ஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்

ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி, எங்கள் பெண்கள், எங்கள் சகோதரிகள், எங்கள் மக்கள் படுபயங்கரமாக, குரூரமாகக் கொலை செய்யப்பட்டனர். ஏதிலிகளாக வந்த அவர்களைப் பற்றி இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை, அவர்கள் குடி உரிமையைப் பற்றி யோசிக்கக்கூட இவர்களுக்கு மனம் இல்லை. இரத்தம் தோய்ந்த கரங்களோடு வந்த இலங்கை அதிபரோடு கை குலுக்கி, கொஞ்சிக் குலாவத்தான் உங்களுக்கு நேரம் இருந்தது. ஈழத்தமிழர்களைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லை. இந்தச் சட்டத்தை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள். இவ்வாறு […]

கோத்தபாய ராஜபக்சேவின் டெல்லி வருகையை எதிர்த்து டெல்லியில் நவ.28-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்- வைகோ

இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் வருகைக்கு எதிராக டெல்லியில் நவம்பர் 28-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தீவில், மனிதகுலம் சந்தித்திராத பேரழிவுக்கு ஆளான ஈழத்தமிழர்கள், நாதி அற்றுப் போனோமா நாம் என்று பதறிக் கதறி, அவலத்தில் கூக்குரல் இடும் நிலை, தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த அதிபர் மகிந்த இராஜபக்சேயின் இராணுவ அமைச்சராக இருந்த ஈவு […]

புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை!

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ எம்பி புலிகளுக்கு ஆதரவாக வாதிட்ட போதும் மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து விடுதலைப்புலிகள் தான் இந்த படுகொலைக்கு காரணம் என்று விடுதலைபுலிகளை சட்ட விரோதமான இயக்கம் என்றும் கூறி இந்தியா முழுவதும் தடை விதித்தும் உத்தரவிட்டது. இந்த தடை கடந்த மே மாதம் முடிவுக்கு வந்ததால், மீண்டும் மேலும் 5 […]

இந்தியா ஒரு நாடே அல்ல! “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.

இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு “United States of India” என மதிமுக பொதுசெயலர் வைகோ இன்று மாலை மாநிலங்களவையில் துணிச்சலான முழக்கத்தை எழுப்பியுள்ளார். தேசிய புலனாய்வு முகவை (NIA) திருத்த சட்டம் தொடர்பில் மாநிலங்களவையில் இடம்பெற்ற வாததின்போதே அதை எதிர்த்து பேசும்போதே இவ்வாறு கூறியுள்ளார். “இது ஒரு இனம், ஒரு கலாச்சாரம், ஒரு தேசம் என அமைந்த நாடு அல்ல.., இது பல தேசிய இனங்களை, பல மொழிகளை, பல கலாச்சாரங்களை […]