ராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது உண்மைகளை உடைத்த ரகோத்தமன்

ராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CBI அதிகாரி ரகோத்தமன் தமிழக ஊடகமான விகடனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் தெரிவித்துள்ளார். அத்தோடு அவர் இந்தியாமீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் ஆனால் இந்தியாவின் தவறான நடவடிக்கைதான் கோபமடைய செய்தது என பல வரலாற்று உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.

டெலோவிலிருந்து முளைக்கின்றது புதிய கட்சி?

இரண்டு வாரத்தில் புதிய தமிழ் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செயலாளர் நாயகம் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சட்டத்தரணி என்.சிறீகாந்தா அறிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கருத்து வெளியிடுகையில் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பை விடுத்திருந்தார். அண்மையில் ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை ஆதரிக்க கட்சி தலைமை முற்பட சிறீகாந்தா தரப்பு தனித்து பயணித்திருந்தது. இந்நிலையில் தனித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்த கே.சிவாஜிலிங்கத்தை சிறீகாந்தா தரப்பு ஆதரிக்க […]

இன்று கொழும்பு வருகிறார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா முகமத் குரேஷி இரண்டு நாட்கள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ளார். சிறிலங்கா அதிபராக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர், கொழும்பு வரும், இரண்டாவது வெளிநாட்டு உயர்மட்டப் பிரதிநிதி இவர் ஆவார். பிரதிநிதிகள் குழுவொன்றுடன் இன்றிரவு 10 மணிக்கு கொழும்பு வரும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், குரேஷி, சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்ட அரசாங்க உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார். கோத்தாபய ராஜபக்ச அதிபராக பதவியேற்றதும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் […]

தேசிய புலனாய்வு பணிப்பாளராக மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ்

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டு தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக (சிஎன்ஐ) நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கஜபா ரெஜிமென்ட்டின் முன்னாள் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் யாழ். பாதுகாப்புப் படைகளின் தளபதி உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த போது, உருவாக்கப்பட்ட அதிபர் காவல்படையின் தளபதியாகவும் பணியாற்றினார். இஸ்ரேலுக்கான […]

சம்பந்தனை வெளியேற்றுவதா?ஆராய்கிறது ஜதேக!

தற்போது இரா.சம்பந்தன் பாவனையிலுள்ள எதிர்கட்சி தலைவர் வதிவிடத்தை கேருவதா அல்லது அவரையே அங்கு தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிப்பதாவென ஜக்கிய தேசியக்கட்சி ஆராய்ந்துவருகின்றது. கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பயன்பாட்டுக்கு பெற்றுகொடுக்கப்படுமென அறிய முடிகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னாள் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது குறித்த அலுவலகத்தை பயன்படுத்தியிருந்த போதும், இதுவரையில் உத்தியோகபூர்மாக கையளிக்கவில்லை எனவும் தெரிவியவருகிறது. எவ்வாறாயினும் குறித்த அலுவலகத்தை எதிர்வரும் (04) புதனன்று ஐ.தே.கவுக்கு பெற்றுகொடுப்படவுள்ளதாக அறிய முடிகிறது. […]

கோத்தா – மோடி ஒரு மணி நேரம் தனியாக பேச்சு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தனியாக ஒரு மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மதியம் ஹைதராபாத் ஹவுசில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இரு நாடுகளின் தலைவர்களுடன் அதிகாரிகள் எவரும் சந்திப்பில் பங்கேற்கவில்லை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவரது உதவியாளர் ஒருவர் மாத்திரம் சந்திப்பில் பங்கேற்றிருந்தார். இதுகுறித்து தமது கீச்சகப் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச, எங்கள் நாடுகளின் இதயங்களுக்கு முக்கியமான மற்றும் நெருக்கமான பல முக்கிய அம்சங்கள் […]

தலைவரின் படத்தை பதிவிட்ட ஒருவர் கைது!

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை முகநூல் மற்றும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த குற்றச்சாட்டின் நேற்று (28) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ஹொரணை மத்திய மண்டல தனியார் நிறுவனத்தில் தொழில்புரியம் சந்தேக நபர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மேலதிக விசாரணைக்காக குறித்த நபர் ஹொரணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

எம்மோடு வாருங்கள் அருந்தவம் விடுக்கும் கோரிக்கை

அண்மையில் தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமை பற்றி கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதிலும் அதுவும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அது மிக அவசியமானது என்பதிலும் மாற்றுக்கருத்துக் கிடையாது. ஆனால் அந்த ஒற்றுமையை கோருவோரிடம் நாம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றோம். இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் இன்று (29) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும், எம்மிடையே […]

யேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் 2019

யேர்மனி ஒபர்கவுசன் நகரத்தில் 27.11.2019 புதன்கிழமை தேசிய மாவீரர் நாள் மிக எழுச்சியாக உணர்வுகள் பொங்க நடைபெற்றது. யேர்மனியில் வாழும் தமிழ் மக்கள் ஓரிடத்தில் அணிதிரண்டு விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய எம் மாவீரச் செல்வங்களுக்கு கண்ணீர் மல்க தங்கள் இதய வணக்கத்தை சுடர் ஏற்றி கார்த்திகை மலர் தூவிச் செலுத்தினார்கள். பொதுச்சுடரினை யேர்மனியின் இடதுசாரிக் கட்சியின் ஒபர்கவுசன் பிரதிநிதி Henning Von Stolzenberg அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகளின் […]

ஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு.

27.11.2019 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். மாவீரர்நாள் நிகழ்வு சரியாக 1மணி 15 நிமிடத்திற்கு ஆரம்பமாகியிருந்தது. மாவீரர்நாள் சிறப்புரையைத் தொடர்ந்து சரியாக 13.35க்கு மணி ஒலித்து ஓய, அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரதான ஈகைச்சடரினை வீரவேங்கை மயிலினி அவர்களின் சகோதரன் திரு. முகுந்தன் சின்னத்தம்பி அவர்கள் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து ஏனைய உரித்துடைய உறவுகளும் கல்லறைகளில் […]

விடுதலைக்காக அரசுடன் பேசி தீர்வு பெற தயார்

அழிந்துபோன எமது தேசத்தையும் சிதைந்துபோன எமது குடும்பங்களையும் மீளக் கட்டியெழுப்புகின்ற தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் பேசத் தயாராக இருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், நாகரீகமுடைய மக்களாக வாழ்வதற்காக எங்களை நாங்கள் ஆளவேண்டும். இதற்கான இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்த இனமாக நாங்கள் இருக்கின்றோம். இந்நிலையில் இந்த இனத்தின் பிரதிநிதிகளாக நன்றியுடையவர்களாக நாங்கள் மாவீரர் தினத்தை கடைப்பிடிக்கின்றோம். […]