மாவீரர் தினத்தில் மலையகத்தில் துண்டுப்பிரசுரம் – இருவர் கைது!

மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் கொண்ட துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த இருவர் கைதாகியுள்ளனர். ‘மலையகமும் எழுச்சியும்’, ‘எழுச்சி என்பது மலையகத்திற்கு எட்டா கனியா’ போன்ற வாசகங்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை பொகவந்தலாவ பகுதியில் விநியோகம் செய்த இரண்டு சந்தேகநபர்களை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (புதன்கிழமை) கைது செய்துள்ளனர். இதில் குறித்த துண்டுபிரசுரத்தினை கணினி ஊடாக அச்சிட்டவரும் உள்ளடங்குவார். இவர்களில் ஒருவர் பொகவந்தலாவ இராணிகாடு தோட்டத்தை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் பொகவந்தலாவ டின்சின் […]

முதலாவது கடத்தல்! சிக்கலில் மாட்டியது இலங்கை அரசு

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டு தடுத்து வைத்து அச்சுறுத்தப்பட்டார் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை உறுதி செய்துள்ள சுவிஸ் தூதரகம் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது. சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பிர்ரே அலையன் எல்ஸசிங்கெர் இந்த வலியுறுத்தலினை முன்வைத்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை பெண் அதிகாரி ஒருவர் வெள்ளை வானில் […]

கோட்டாபயவின் டெல்லி வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய வைகோ கைது!

சிறிலங்கா சனாதிபதியாக வெற்றிபெற்றபின் கோத்தமாய ராசபக்ச முதல் அரசுமுறைப் பயணமாக இந்திய சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழினப்படுகொலையின் முக்கிய கொலையாளி என உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இந்திய தலைநகர் புதுதில்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி தலமையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது இதில் அக்கட்சியின் மற்றொரு எம்பியான கணேசமூர்த்தியும் மற்றும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா உட்பட நூற்றுக்கணக்கான கட்சியினர் மற்றும் தமிழுணர்வாளர்கள் கலந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அனைவரும் தில்லி காவல்துறையால் […]

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ வணக்கம்

தமிழீழ தேச விடுதலைக்காக களமாடி இன்னுயிர்களை ஈந்த மாவீர்களுக்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தப்பட்டது. மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார், பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுவந்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர். தாயக நேரப்படி சரியாக 6.05 மணிக்கு மணி ஒலிக்கப்பட்டு, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. பிரதான ஈகச்சுடரை இரு மாவீரர்களின் சகோதரியான நிரஞ்சன் கலைவாணி ஏற்றினார். அதைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர், […]

முள்ளியவளை துயிலும் இல்ல மாவீரர் நினைவேந்தல்

முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நியூசிலாந்து மண்ணில் எழுச்சி பூர்வமாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019

மாவீரர் நாள்! தமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் விதையாகி போன தியாக வீரமறவர்களை வணங்கிடும் புனித நாள். இப்புனித நாளில் தமிழீழ விடியலுக்காய் சரித்திரமாகி போன வேங்கைகளுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டும் என்ற வகையில் நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஓக்லாந்து நகரில் கார்த்திகை 27 ஆம் நாள் Mt Roskill war memorial மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வீரவணக்க நிகழ்வுகள் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. மாலை 6.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. தமிழ் […]

கஞ்சிகுடிச்சாறு கண்ணீரில் நிரம்பியது

அம்பாறை – கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது நான்கு மாவீரர்களின் தாயரான ஏரம்பு செல்லம்மா பொதுச் சுடரினை ஏற்றிவைத்துள்ளார். கொட்டும் மழைக்கு மத்தியிலும் பெருமளவான தாய்மார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்ணீருடன் உயிர்நீத்த தமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முழங்காவில் துயிலும் இல்ல நினைவேந்தல்

கிளிநொச்சி – முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கிழக்கு பல்லை வளாகத்தில் எழுச்சி நினைவேந்தல்

மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய மாவீரர் தினம் இன்று (27) கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர். இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இராணுவ தடையை மீறி அஞ்சலி!

தென்மராட்சி – கொடிகாமத்தில் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் தினமான இன்று மாவீரர்களுக்கு பல இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதற்கமைய கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக நினைவேந்தலை நடாத்த முற்பட்டபோது இராணுவத்தினர் தடையை ஏறபடுத்தியுள்ளனர். ஆயினும் தடைகளைத் தாண்டி குறித்த இராணுவ முகாமின் எல்லைப் பகுதிகளில் சுடர் ஏற்றப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வு எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது.