ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆதரவு தெரிவித்த வேட்பாளர் வெற்றிபெறாமல் போனால் எமக்கு சிரமமாக இருக்கும் என்பதனாலேயே மக்களை சிந்தித்து வாக்களிக்க கோரியதாக வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையை பரிசீலித்து வருவதாகவும் அடுத்த 3 நாட்களில் அதனை ஆராய்ந்து சரியான தீர்மானத்தை அறிவிப்போம் என்றும் அவர் கூறினார். யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், வேட்பாளர்களில் அறிக்கையில் சிங்களம், […]
Author: இலக்கியன்
விரும்பிய வேட்பாளருக்கு அஞ்சல் வாக்கை பதிவு செய்யுமாறு 5 தமிழ்க்கட்சிகள் கோரிக்கை
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், இதில் தமிழ்மக்கள் தவறாது வாக்களிக்குமாறு ஐந்து தமிழ்க்கட்சிகள், கோரியுள்ளன. எனினும், யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை தமிழ் மக்களையே எடுக்குமாறும் அந்தக் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து கையெழுத்திட்ட 13 அம்ச கோரிக்கைகளை எந்தவொரு பிரதான அதிபர் வேட்பாளரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இந்தக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று பிற்பகல், 4 மணியளவில் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்தனர். தமிழ்க் கட்சிகள் முன்வைத்த […]
உலங்குவானூர்தி விபத்தில் இருந்து தப்பினார் சஜித் – மொட்டு தரப்பு சதிவேலை?
புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்றிரவு உலங்குவானூர்தி விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாகவும், இது ஒரு சதிவேலையாக இருக்கலாம் என்றும் ஐதேக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சஜித் பிரேமதாச நேற்று வவுனியா, கிண்ணியா, தம்புள்ள ஆகிய இடங்களில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றி விட்டு குருநாகலவில் நடந்த பாரிய கூட்டத்தில் பங்கேற்கவிருந்தார். அவர் பயணம் செய்த உலங்குவானூர்தி, தரையிறங்கிக் கொண்டிருந்த போது, அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருள் சூழ்ந்தது. இதனால் உலங்குவானூர்தியை தரையிறக்க […]
உத்தரவாதம் வேண்டும் முன்னணி விடாப்பிடி
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? எனும் கேள்வியோடு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், தென்னிலங்கை பிரதான அரசியல் தலைமைகள் தமிழ்மக்களின் கோரிக்கைகள் குறித்து செவிசாய்க்கத நிலையில் தமிழ்மக்கள் எவ்வாறு முடிவு எடுப்பது சிறந்தது என்பது குறித்து முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? இலங்கைத்தீவில் கடந்த பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு […]
ஐந்து கட்சிகளின் முடிவு எப்போது? கூறுகிறார் சுரேஷ்
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் தமிழ் மக்கள் திட்டவட்டமான முடிவினை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதற்கான இறுதிமுடிவினை நாளை மறுதினம் 30 ஆம் திகதி எடுக்கவுள்ளோம் என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுப்பதர்கான 5 தமிழ்அரசியல் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பிரைட் இன் விருந்தினர் விடுதியில் இன்றுநடைபெற்றது. இந்த கலந்துரையாடல் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி மூன்றரை […]
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை போன்று கொள்கையில் உறுதியாக இருங்கள்:சிவாஜிலிங்கம் கோரிக்கை
ஐந்து தமிழ்க்கட்சிகளின் உடன்படிக்கையில் இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக குறிப்பிடுவதில் என்ன பிரச்சனையுள்ளது? ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், விக்னேஸ்வரன் தரப்பு அதை நிராகரிப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டு விட்டார்கள்தானே என கேள்வியெழுப்பியுள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம். இன்று (15) யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் நடத்திய பல சுற்று பேச்சின் பின்னர், ஐந்து கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் கையெழுத்திடவில்லை. தமிழ் தெசிய மக்கள் முன்னணி […]
தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது
யார் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய நீதியை வழங்கப் போவதில்லை. எனவே தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ் மாவட்ட சங்கத் தலைவி சுகந்தினி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்தே போராடி வந்தோம். நாம் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. இந்நிலையில் ஏனைய பகுதிகளிலுள்ள […]
கட்சியை காட்டிக்கொடுத்தார் சிறிசேன-சந்திரிகா குற்றச்சாட்டு
தனிப்பட்ட நலன்களுக்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று கட்சியின் முன்னாள் தலைவியான சந்திரிகா குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கு அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “நாட்டின் அதிபர் உள்ளிட்ட சந்தர்ப்பவாத தலைவர்கள், கட்சியின் 95 வீதமான அமைப்பாளர்களின் கருத்துக்களை நிராகரித்து, தனிப்பட்ட இலாபத்துக்காக சதிகாரர்களுடன் ஒரு உடன்பாட்டுக்குச் சென்றுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சி. ஜனநாயகத்தை மதித்து- ஆதரித்த ஒரு கட்சியாக இருந்து […]
யாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம்
இந்தியாவின் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் இன்று (15) காலை வருகை தந்த எயார் இந்தியன் அல்லையன்ஸ் விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இவ் விமானத்தில் வருகை தந்த அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இதேவேளை 17ம் திகதி திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
முதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள்
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில், இந்தியாவில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் வியாழக்கிழமை, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர். இதன்போது, சென்னையில் இருந்து வரும் அலையன்ஸ் எயார் விமானம் ஒன்று தரையிறங்கவுள்ளது. இந்த விமானத்தில் விமானத்துறையைச் சார்ந்த அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர். இவர்களை வரவேற்கும் நிகழ்வில்சிறிலங்கா அதிபரும், பிரதமரும் […]
நாம் போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை!
இடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம். கெஞ்சினோம். ஆனால் அது நடக்கவில்லை. எங்களை திட்டமிட்டு ஓரங்கட்டியுள்ளனர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திகுமார் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு […]
முடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்?
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (14) ஐந்தாவது நாளாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஐந்து கட்சிகள் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் […]










