தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் – பிரிட்டன் எம்பி

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தற்போது மீண்டுமொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுஆனால் இது பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு பொறிமுறையையோ ஏற்படுத்தாது என்ற கரிசனை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். ஸ்கொட்டிஸ் தேசிய கட்சியின் நாடாளுமன்ற […]

யாழில் DJ nightக்கு அனுமதி மறுப்பு!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் ஒன்றில், வருட இறுதியை முன்னிட்டு (Year End) இரவு இசை நிகழ்வுக்கு (DJ night) யாழ்.மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் மாநகர சபை அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் திகதி விடுதி ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்வில் (DJ night) கலந்து கொண்ட இளையோர் மது அருந்தியதாகவும் , அதில் சிலர் போதைப்பொருளை பாவித்ததாகவும் செய்திகள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி […]

பருத்தித்துறை நீதிமன்றில் குழப்பம் – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த காவல்துறை உத்தியோகத்தர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தை காவல் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், இன்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு சாட்சியமளிப்பதற்காக சென்றிருந்தார். குறித்த நபர் நீதிமன்ற அமர்வில் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். அதனை அடுத்து நபரை கைது செய்த, நீதிமன்ற காவல்துறையினர் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்தினர். சந்தேக நபரை நாளைய தினம் […]

அலெக்ஸிக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த்தாக கூறப்படும் இளைஞரிற்கு நீதி கோரி வட்டுக் கோட்டைச் சந்தியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது;கடந்த வாரம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இருந்த அலெக்சாண்டர் என்ற இளைஞர் மிகக் கொடூரமான முறையிலே சித்திரவதை செய்யப்பட்டு அடித்து படுகொலை செய்யப்பட்டிருக்கின்ற சம்பவத்தை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். உயிரிழந்த இந்த இளைஞரும் அவரது குடும்பத்தவர்களும் சமூகத்திலே மிக […]

மாவீரர் நாள் 2023 உணர்த்துவது – நிலாந்தன்.

மட்டக்களப்பு,மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில், மாவீரர் நாளன்று போலீசார் பெருமளவுக்குத் தடைகளை ஏற்படுத்தினார்கள்.அத் துயிலுமில்லத்தின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களை அடிக்கடி கூப்பிட்டு விசாரித்தார்கள்.அக் குழுவிற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அந்த துயிலுமில்லத்தின் ஒரு பகுதியில் மலைக் கல்லில் பொறிக்கப்பட்டிருந்த கார்த்திகை 27 என்ற எழுத்தை அகற்றுமாறு கேட்டார்கள். கொடிகளை அகற்றச் சொல்லியும், பாடல்களை நிறுத்தச் சொல்லியும், ஒலிபெருக்கியை நிறுத்த சொல்வியும்,தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.சுடர் வணக்க நேரத்தின் போது ஒலிபெருக்கி […]

திருகோணமலையில் காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை,வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எவ்வாறு இருப்பினும் இதுவரை எந்த ஒரு அரச அதிகாரிகளும் இது தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் திருகோணமலை – அனுராதபுரம் பிரதான வீதியினை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த உப்புவெளி பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடுவதற்கு உதவி செய்வதாக உறுதியளித்ததை அடுத்து […]

பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் உள்ளிட்டவர்களை மட்டு சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தர். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை […]

நெடுந்தீவு மக்களுக்கு படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை!

நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய தூதுவர் வியாழக்கிழமை (30) நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றார். இதன்போதே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.இதன்போது இந்திய தூதுவரிடம் நெடுந்தீவு மக்களுக்கான குடிநீர் தேவையினை சீராக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றையும் பெற்றுத் தருமாறும் பிரதேச […]

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் -பிரிட்டனும் கவலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறுவது குறித்து இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் அன்றூ பட்ரிக் கரிசனை வெளியிட்டுள்ளார் டுவிட்டரில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளேன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்துவதாகவும் மனித உரிமைகளை மதிக்கும் புதிய சட்டத்தினை கொண்டுவருவதாகவும் இலங்கை அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளில் உறுதியாகயிருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

தளபதி ராம் விடுதலை!

விடுதலை புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் நேற்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றையதினம் 6 வருட சிறை தண்டனை நிறைவு பெற்ற நிலையில் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் அம்பாறை மாவட்ட […]

இந்திய தூதரகத்திற்கு மதிப்பளித்தது முன்னணி!

வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டுகின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் கூறியிருந்தார். ஆனால், கடலுக்கு செல்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் தற்போதும் இடம்பெறுகின்றது. அத்தோடு இதனை கண்டுகொள்ளாமல் பிரச்சினைக்கு தீர்வை காணாமல் இருப்பது இரு தரப்பையும் […]