யாழ்ப்பாணத்தில் மாவீரர் வார நிகழ்வுகளை அனுஷ்டித்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவீரர் வார காலப்பகுதியில் கொக்குவில் சிவசுப்பிரமணியர் முருகன் கோவிலடியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (06) இரு இளைஞர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டன. மாவீரர் நாள் குறித்து முகநூலில் பதிவிட்டமை தொடர்பில் கடந்த 29ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த […]
Category: செய்திகள்
சிறீதரனை பிரேரித்தார் கஜேந்திரகுமார்:துளிர்க்கும் உறவு!
இலங்கை நாடாளுமன்ற அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக, யாழ்.தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய 11 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேரிலிருந்து அரசியலமைப்புக் குழுவுக்கான பிரதிநிதி ஒருவரை தெரிவுசெய்வதாக தீர்மானிக்கப்பட்டது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் அவர்களை, தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் முன்மொழிய, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் […]
அதிமுகவில் மீண்டும் ஒபிஎஸ் ?
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓபிஎஸ் தரப்புக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி, இனியும் சுதாரிக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு பாதகம் ஏற்படும் எனக் கூறியுள்ளார். திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிமுறைகளுக்கு செயல்பட்டது தொடர்பாகவும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக […]
பயங்கரவாத தடை சட்டத்தை உடன் நீக்குங்கள்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக வேட்டையில் ஈடுபடுவது நியாயமா? இவ்வளவு பெரிய ஆணையைப் பெறுவதற்கு சமூக ஊடகத் துறையிலிருந்து உங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. ஆனால் இந்த நேரத்தில் இந்த […]
தமிழீழ விடுதலைப் புலிகளின் 2024 மாவீரர்நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2024 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழ மக்களின் இறைமையை மீட்டெடுத்து, தமிழீழ அரசமைக்கும் புரட்சிகர வரலாற்றுப்பயணத்திற்காக, விடுதலைக்கனவுடன் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரத் தெய்வங்களை வணங்கி, நினைவுகூர்ந்து, அவர்கள் கனவு நனவாக நாம் உறுதியுடன் போராடியே தீருவோமென உறுதிகொள்ளும் புரட்சிகரநாள். தமிழின விடுதலைக்காகத் தம்மை ஈந்து, எமது மண்ணில் விதையாகிப்போன மாவீரர்களின் ஈகத்தினை ஒவ்வொருவரது நெஞ்சத்திலும் நிறுத்தி, தமிழ்த்தேசியம் என்ற […]
வியாபாரா நிலையங்களை பூட்டி மாவீரர் நாளிற்கு மதிப்பளித்த புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள்
புதுக்குடியிருப்பில் வர்த்தக சங்கத்தினர் அனைத்து கடைகளையும் பூட்டி இன்றையதினம் மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஆதரவு வழங்கியுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் பூட்டி யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆதரவு வழங்கியுள்ளதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் தர்மலிங்கம் நவநீதன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு இன்று மாலை அஞ்சலி செய்வதற்கு தயாராகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நல்லூரில் 07 பானைகளில் பொங்கல்
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாளான இன்றைய தினம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. 7 சகாப்தத்தை குறிக்கும் வகையில் 7 பானைகளில் பொங்கல் வைத்து, 70தாவது அகவை தினத்தை குறிக்கும் வகையில் 70 மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
வரலாறு உருவாக்கிய வழிகாட்டி! – சிவசக்தி
எக்காலத்திலும் எவராலும் ஏற்றுப்போற்றக்கூடிய உன்னத தலைவன். இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே… உள்ளோடி…. குருதிக்கலங்களில் வீரத்தையும் மானத்தையும் பொங்கியெழச் செய்யும் வல்லமை…. உலகவரலாற்றில் காலத்துக்கு காலம் தலைவர்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள்.. ஆனால் காலத்தால் உருவாக்கப்பட்ட ஒப்பற்ற தலைவன் எங்கள் பிரபாகரன் அவர்களே! ஆண்டுகள் பலவாய் அழுது துடித்திருந்தது தமிழரினம். தமிழர்களின் முன்னாள் அரசியல் தலைவர்கள் அமைதிவழிப் போராட்ட வழிமுறைகளினால் எமது உரிமைகளைப் பெற்றுவிடலாம் என நம்பினார்கள். அதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார்கள்… ஆனால் தமிழர்களின் உரிமைப்போரை முளையிலேயே நசுக்கிவிட […]
உலகமுள்ளவரை உனக்கு வயது – புதுவை இரத்தினதுரை.
ஐயநின் மேனியின் அழகதும்,நெஞ்சினில்அடர்ந்துள்ள வீரத்தின் அழகும், அன்னைமண் தன்னையுன் ஆயிரம் கரங்களால்அரவணைக் கின்ற பேரழகும்,வெய்யவர் கண்டுநீ வெகுண்டெழும் போதினில் விரிகின்ற கோபத்தின் அழகும்விடுதலைக் கானநேர் வீதியை என்றுமேவிட்டறி யாதநின் அழகும், பொய்யறி வின்றியே போரறிவோடெமைப்புலியென நிமிர்த்திய அழகும், புவியினில் இன்றுள தமிழரின் வாயெல்லாம்பேசிடும் உன்பெயர் அழகும்வையகம் உள்ளள வாகுக, அதுவரைவயதுக் காகுக அழகா. வாயெடுத் தாயிரம் வாழ்த்துரைத்தோம், தமிழ்வாசலில் வாழுக தலைவா. கவியாக்கம் – புதுவை இரத்தினதுரை.
அனுரவை எதிர்க்க கைகோர்க்கும் சஜித்,ரணில்!
பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. இன்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கூட்டமொன்றில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்டதலைவர் ஒருவர் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு இரு […]
நாட்டை விட்டு தப்பியோடும் மகிந்த ராஜபக்ஷ தரப்பினர்!
ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அரசியல்வாதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லத் தொடங்கியுள்ளனர். நேற்று மாலை முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இத்தேகந்தே சத்ததிஸ்ஸ தேரர் ஹொங்கொங் நோக்கி பயணமாகியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மனைவியான லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் இன்று காலை 03.30 மணியளவில் டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க […]
சொந்த தொகுதியில் மக்களால் தூக்கி எறியப்பட்ட ராஜபக்சர்கள் !
நாமல் ராஜபக்சவின் சொந்தத் தேர்தல் தொகுதியான பெலியத்தை தேர்தல் தொகுதியில் அவர் படுதோல்வியடைந்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவின் தேர்தல் தொகுதியும், ராஜபக்ச குடும்பத்தின் பரம்பரை தொகுதியுமான பெலியத்தையில் அனுரகுமார திசாநாயக்க பாரிய வெற்றியீட்டியுள்ளார். அவர் 34,320 வாக்குகளைப் பெற்று 53.43 வீத வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளார். இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள சஜித் பிரேமதாச 16,820 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 5,460 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். வெறுமனே 5385 வாக்குகளுடன் நாமல் தனது […]