மயிலிட்டியில் ஆர்.பி.ஜீ குண்டுகள் மீட்பு

யாழ்.மயிலிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆர்.பி.ஜீ குண்டுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இராணுவக் கட்டுப்பாட்ட்டி லிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள கிணறு ஒன்றைத் துப்பரவாக்கிய போதுஇ வெடி பொருள் இருப்பதை உரிமையாளர் அவதானித்தார். உரிமையாளர் மிதிவெடி அகற்றும் பிரிவினருக்கு அறிவித்தல் கொடுத்தார். அதனையடுத்து கிணற்றில் இருந்து முன்று மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு

இரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான செயற்திட்டத்துக்கான முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுனராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுரேன் ராகவன் நேற்று இரணைமடுவுக்கு கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். ஆளுனராகப் பதவியேற்ற பின்னர் இரணைமடுவுக்கு அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இதுவாகும். முதல் பயணத்தின் போது, கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து […]

பௌத்த பிக்குவின் அடாவடி-ஒருவர் பலி!

பொலனறுவை மாவட்டம் ஹபரன உல்பத்கம பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து குறித்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பௌத்த பிக்குவிற்கும் உயிரிழந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் பௌத்த பிக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 32வயதுடைய அதே பகுதியை […]

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியா… எச்சரிக்கும் தினகரன்!

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது காங்கிரசுடன் நாங்கள் சேருவோம் என்று கூறமுடியாது. நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன். நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நாடகம் ஆடுகிறார். முதலமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில், தொடர்ச்சியாக பாஜக குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார், அவர் இந்த […]

அங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்!

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் மற்றும் காணொளிகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அவ்வறிக்கைகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக்ககைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பிலேயே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கண்ட கருத்தினை வெளியிட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்

ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுப்பதில், மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைசிறந்த தலைவராக விளங்கியதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்தோடு இலங்கையில் 83 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலையை கண்டித்து மிகப்பெரும் கடையடைப்பை முன்னெடுத்து வெற்றிக்கண்டவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்தநாள் நினைவுதினம் நேற்று (வியாழக்கிழமை) யாழில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் […]

சிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு!

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களுக்கும் , ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து மீனவர்களை கடுமையாக எச்சரித்து ஊர்காவற்துறை நீதிமன்று விடுவித்துள்ளது. யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்ற சாட்டில் ஒன்பது தமிழக மீனவர்களை கடற்படையினர் கடந்த 13ஆம் திகதி அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை அன்றைய தினம் மாலை கடற்படையினர் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் அவர்கள் அன்று மாலை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற […]

புலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை?

பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளமையினால் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது; நேற்று (16.01.2019) காலை 9.30 மணிக்கு கொழும்பில் உள்ள இரண்டாம் மாடிக்கு எங்களை அழைத்து பிற்பகல் 2.30 […]

லக்ஸ்மன் கதிர்காமர் கொலை- 14ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது

இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் நவநீதன் கைது செய்யப்பட்டுள்ளார். ஈழத் தமிழர்கள் விடுதலைக்கான போரை நடத்திய போது சிங்கள அரசில் அமைச்சராக இருந்து கொண்டு புலிகளை ஒடுக்க தீவிரம் காட்டியவர் லக்ஸ்மன் கதிர்காமர். இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து புலிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் முனைப்பு காட்டினார். கடந்த 2005-ம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டார். அதேபோல் […]

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார் மகிந்த

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று காலை 8.45 மணியளவில் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் தனது பணிகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்தார்.

தமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை!!! -அனைத்துலக ஈழத்தமிர் மக்களவை-

தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2050 ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை நிர்ணயிக்கும் ஆண்டாக மலரவேண்டும். தமிழர்களின் இன்னல்கள் அகன்று தமிழர் தலைநிர்ந்து வாழும் வளமான ஆண்டாக மலரட்டும் இத் தைத்திருநாள். இயற்கைக்கும் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் உயரிய பண்புடைய தமிழர்களின் தொல் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அடையாளப்படுத்தும் இப்பண்டிகையை தமிழர்கள் சுயமரியாதையுடன் கொண்டாட வழிபிறக்கட்டும். மானிட வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மானம், உயிர் மற்றும் காலம் ஆகிய இம்மூன்று விடையங்களும் ஆகும். மானம்: காலங்காலமாகக் […]

அமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார் என்று வெளியாகிய தகவல்களை உறுதிப்படுத்த அவரது பேச்சாளர் மறுத்துள்ளார். கோத்தாபய ராஜபக்ச அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான ஆவணங்களை கையளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த ஊகங்களை நிராகரித்துள்ள கோத்தாபய ராஜபக்சவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை பற்றி பகிரங்கப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். இது […]