பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியா… எச்சரிக்கும் தினகரன்!

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது காங்கிரசுடன் நாங்கள் சேருவோம் என்று கூறமுடியாது. நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன்.

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நாடகம் ஆடுகிறார். முதலமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில், தொடர்ச்சியாக பாஜக குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார், அவர் இந்த ஆட்சியை கலைக்க விரும்புகிறார்.

கொடநாடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று கூறினார்.

தொடர்டர்புடைய செய்திகள்
மு.க. ஸ்டாலின் ஒரு செல்லாத காசு என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் தோல்வி
ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
அதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*