சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை காலை 8.30 மணியளவில், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் இடம்பெறும் 28 அமைச்சர்கள் நாளை காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீரவும், சக்தி, மின்சக்தி அமைச்சராக ரவி கருணாநாயக்கவும், சுகாதார அமைச்சராக ராஜித சேனாரத்னவும், பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக சம்பிக்க ரணவக்கவும் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு […]
Category: செய்திகள்
மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை – சிங்கக்கொடி சம்பந்தன்
மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் தனக்கு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதே பிரச்சினை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு கொள்கையின் அடிப்படையிலேயே தாம் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். புதிய எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மஹிந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆனதில் தமக்கு பிரச்சினை […]
முல்லைத்தீவு கடற்கரையில் தமிழீழத் தேசியக் கொடி!
முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது முல்லைத்தீவுச் செய்தியாளர் கூறுகின்றார். குறித்த தேசியக் கொடி புத்தம்புதியதாய் உள்ளதுடன் கடலிலிருந்து மிதந்துவந்து கரையொதுங்கிய நிலையில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு வந்த பொலிஸார் அதனை மீட்டுச் சென்றதாக எமது செய்தியாளர் மேலும் கூறுகின்றார். இதேவேளை இதுதொடர்பான விசாரணைகளில் தாம் ஈடுபடுள்ளதாக கூறும் முல்லைத்தீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் யாரையும் இன்னும் கைதுசெய்யவில்லை […]
பறிக்கப்பட்டது பதவி – கொதிப்படையும் சுமந்திரன்
எதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்ததால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பதவி வகிக்க முடிந்தது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணையப் போவதில்லை என்று முடிவு செய்துள்ள நிலையில், 101 […]
சம்பந்தனின் பதவியை பறித்தார் மகிந்த!
எதிா்கட்சி தலைவா் பதவியிலிருந்து இரா.சம்மந்தனை துாக்கி எறிந்துவிட்டு அப்பதவி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிவிப்பை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக உறுப்பினர் கொண்ட கட்சியின் உறுப்பினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும். அதற்கமைய அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.எனினும் தாமரை மொட்டு தலைவராகிய மஹிந்த ராஜபக்சவுக்கு […]
புலிகள் செய்த தவறு இதுதான் – கஜேந்திரகுமார்
தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் வாக்குகள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாதிருந்த நிலையில் நிபந்தனைகள் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியதால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கவலை வெளியிட்டிருக்கின்றார். இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிடட மேற்குலக வல்லரசுகளின் எடுபிடிகளாக தமிழ்த் தலைமைகள் செயற்பட்டுக்கொண்டிருப்பதாலேயே, தமிழ் மக்களின் உரிமைகளை மறந்து, அவர்களின் உத்தரவிற்கு அமைய கூட்டமைப்பு ரணிலுக்கு […]
திடீர் மக்கள் சந்திப்பில் முன்னணி!
மட்டக்களப்பில் இன்றைய தினம் (17) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலும், மக்கள் சந்திப்பும் நடைபெற்றது. நகரிலுள்ள கூட்டுறவு மண்டபத்தல் நடைபெற்ற இச் சந்திப்லில் மாவட்ட அமைப்பாளர். என். சுரேஸ், இணைப்பாளர் கே.ஜெகநீதன், கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி-போகும்
15.12.2018 சனிக்கிழமை யேர்மனி போகும் நகரில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி போகும் நகரில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து சுடர் வணக்கத்தினை வருகை தந்திருந்த மக்கள் வரிசையாக வந்து உணர்வு பூர்வமாகச் செலுத்தினர்.பின் பல கலை நிகழ்வுகளுடன் சிறப்புரையும் நிகழ்ந்தது இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு நிகழ்வு இனிதே […]
வெட்டுவோமென்கிறார் கூட்டமைப்பின் உபதவிசாளர்?
பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் 2019 இற்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். மாறாக எதிர்த்து வாக்களித்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வெட்டி ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு எங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கிவிடுவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த 13ம் திகதி வியாழக்கிழமையன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் தொலைபேசியில் தம்மை எச்சரித்ததாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பளை பிரதேச சபை உறுப்பினர் தி. […]
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டால் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையற்றதாக மாற்றியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகாரணமாக இலங்கையின் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையற்றதாக மாற்றியுள்ளது என தமிழ்த்தேசியக் மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். இன்று (17) கிளிநொச்சியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளரும், கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமான தங்கவேல் ஜேகதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு […]
படையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரும் அதுபோன்றே விடுவிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று முற்பகல் அதிபர் செயலகத்தில் பதவியேற்றார். இதையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். அப்போது அவர், “குற்றமிழைத்த விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அவர்களில் பலர் […]
இளம் தாய் மரணம் – கணவன் கைது
மட்டக்களப்பு வாகரை பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப் பெண்ணின் கணவரை கைதுசெய்துள்ளதாக வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். வாகரை சின்னதட்டமுனி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சிவராசா சிரேந்தினி என்பவரே நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந் நிலையிலேயே இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட வாகரை பொலிஸார் 24 வயதுடைய அவரது கணவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் போது […]












