புலிகள் செய்த தவறு இதுதான் – கஜேந்திரகுமார்

தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் வாக்குகள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாதிருந்த நிலையில் நிபந்தனைகள் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியதால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கவலை வெளியிட்டிருக்கின்றார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிடட மேற்குலக வல்லரசுகளின் எடுபிடிகளாக தமிழ்த் தலைமைகள் செயற்பட்டுக்கொண்டிருப்பதாலேயே, தமிழ் மக்களின் உரிமைகளை மறந்து, அவர்களின் உத்தரவிற்கு அமைய கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு நகரில் இன்று திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரணில் தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கியதற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நம்பியமையே தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த மிகப் பெரிய தவறு என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்