எனது வாக்கு கஜேந்திரகுமாரிற்கே:சி.வி!

வடக்குக் கிழக்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவ்வாறான ஒரு பின்னணியில் கஜேந்திரகுமார் தேர்தலை புறக்கணிப்பது நடைமுறை சாத்தியமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து தொடர்பாக பதிலளித்துள்ள அவர் “வழமைப் போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தேர்தல் புறக்கணிப்பை கண்காணித்து வழிநடத்தியிருப்பார்கள். எனினும் தற்பொழுது வடக்குக் கிழக்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவ்வாறான ஒரு பின்னணியில் […]

“கட்சியின் தேசிய அமைப்பாளர் – ஊடக பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்து நீடிப்பேன்”

“எனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கு எதிரானது, இயற்கை நீதிக்கோட்பாட்டுக்கு எதிரானது என்பதனால் நான் தொடர்ந்து கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்து நீடிப்பேன் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இரு தினங்களில் எனக்கு கட்சி தலைவர் மற்றும் செயலாளரினால் […]

தமிழர் தேசமும் ஒன்றுபட்டு நிற்கின்றது

இலங்கை என்பது ஒரு பல்தேச நாடாகும். இங்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன. அந்தவகையில் எங்கள் உரிமைகள் சமனானதாக இருக்க வேண்டும் இன்றையதினம் (21.08.2020) நாடாளுமன்ற அமர்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்.. எங்களுக்காக அங்கீகாரம் சமனானதாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே எம் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தே அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதற்கான ஆணையே கடந்த தேர்தலின் போது ஏக மனதாக வடக்கு கிழக்கில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. டக்ளஸ் […]

இறையாண்மை எனக் கூறி போர்க் குற்றத்தை மறைக்க முடியாது – கஜேந்திரகுமார் முழக்கம்!

ஜனாதிபதி நாட்டின் இறையாண்மை குறித்து பேசுகின்றார், ஆனால் இலங்கையின் இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. அவ்வாறு இருக்கையில் இறையாண்மையை முதன்மைப்படுத்தி போர் குற்றங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவோ முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் பேசும் போதே இதனை தெரிவித்தார். மேலும், “இலங்கை என்பது தேசிய நாடு. இங்கு இரு தேசிய இனங்கள் பிரதிநிதித்துவப் […]

மாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிருக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து அதன் கட்சி தலைவர் திரு .கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர். மேலும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சியில் 55,000 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைக் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பெற்றுள்ளனர்.

ஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது

கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிறீலங்காவினுடைய புதிய ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட விடயம் இன்று மிகமுக்கிய பேச்சுப்பொருளான விடயமாக உள்ளது. விசேடமாக இந்திய ஊடகங்களுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு சுமார் 100 வருடங்களுக்கு வழங்கப்பட்டமை தவறு என்றும் அந்த ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்யப்படல் வேண்டும். என்றும் பகீரங்கமாகக் கூறியுள்ளார். இந்திய தனது தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அயல் நாடுகளில் வெளிசக்திகள் – குறிப்பாக வல்லரசுகள் காலூன்றுவதனைத் […]

நேற்று வரை இருந்து விட்டு மாற்று அணி தேடுகின்றனர்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் நேற்றுவரை கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள். இன்று அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நேற்றுவரை இருந்துவிட்டு இன்று மாற்று அணியைத் தேடுகின்றவர்கள் ஒன்று சேரும் இடம் இன்னும் ஒரு […]

தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்! – இரா.மயூதரன்.

தமிழ் மக்களை, தமிழ் மக்களின் நிலையில் நின்று தமிழர் தேசத்தின் நோக்கு நிலையில் நின்று வழிநடாத்தவல்ல நேரிய தலைவனில்லாத சூழமைவில் நடைபெறும் மூன்றாவது சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலும் வகையிலேயே இன்றைய தமிழ்த் தலைமைகளின் முடிவுகள் அமைந்துள்ளது. சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது குறித்தது குறித்தவாறு 2019 இறுதியில் ஏதோவொரு தினத்தில் நடக்கும் என்பது 2015 சனவரி 8 இல் மைத்திரி […]

அதிபர் தேர்தல் – தமிழ்க் கட்சிகளின் ஆதரவு யாருக்கு?

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டோ இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. எனினும், சஜித் பிரேமதாசவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதிபர் தேர்தல் குறித்த இறுதியான முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்று, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையை கவனமாக ஆய்வு செய்து வருகிறோம். யாருக்கு ஆதரவளிப்பது என்று விரைவில் அறிவிப்போம் […]

உத்தரவாதம் வேண்டும் முன்னணி விடாப்பிடி

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? எனும் கேள்வியோடு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், தென்னிலங்கை பிரதான அரசியல் தலைமைகள் தமிழ்மக்களின் கோரிக்கைகள் குறித்து செவிசாய்க்கத நிலையில் தமிழ்மக்கள் எவ்வாறு முடிவு எடுப்பது சிறந்தது என்பது குறித்து முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? இலங்கைத்தீவில் கடந்த பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு […]

நாம் போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை!

இடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம். கெஞ்சினோம். ஆனால் அது நடக்கவில்லை. எங்களை திட்டமிட்டு ஓரங்கட்டியுள்ளனர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திகுமார் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு […]

முடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (14) ஐந்தாவது நாளாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஐந்து கட்சிகள் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் […]