புலிகளாகவே நினைவு கூர மக்கள் விரும்புகின்றார்கள்!

புலிகள் பயங்கரவாதிகள் என்று இந்த உலகும், சிறிலங்கா அரசும் கூறியது, கூறியும் வருகின்றது. ஆனால் புலிகள் யார் என்ற தெளிவான செய்தியை வடக்கு கிழக்கு மக்கள் கூறியுள்ளார்கள். கேட்கத் தவறியவர்களுக்கு இனியும் கூறுவார்கள். கூறிக்கொண்டே இருப்பார்கள்.

வடகிழக்கில் நான் அவதானித்ததன்படி களமாடி வித்தாகி போனவர்களை தமது பிள்ளைகளாக அல்லது உறவு முறையாக நினைவு கூர்வதனை காட்டிலும் ஒரு மாவீரனாக, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளியாக, இந்த மண்ணுக்காக உயிர் துறந்த விடுதலை வீரனாகவே நினைவு கூர்வதில் அதிக ஆர்வம் காட்டியிருந்தனர்.

அனேகமான துயிலுமில்லங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய சீருடையுடன் இருந்த தமது பிள்ளைகளின் படங்களை வைத்தே பெற்றோர்கள் அஞ்சலி செய்திருந்தனர்.

புலிகள் தான் மக்களை கட்டாயப்படுத்தி இவற்றை செய்தார்கள் என்று இம்முறை யாராலும் கூற இயலாது.

இப்போது எனக்குள் எழும் கேள்வி ஒன்று தான்!

சில ஆயிரம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்றவர்கள், இத்தனை இலட்சம் மக்களையும் எவ்வாறு கூற போகின்றார்கள்?

(படம்:கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்)

முகநூலிலிருந்து : Shalin Stalin

தொடர்டர்புடைய செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத்த
முல்லைத்தீவு பெருங்காட்டு புகதியில் கண்டுபிடிக்கப்பட் விடுதலை புலிகளின் நிலத்தடி காவலரண் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கோப்பாப்புலவு புதுக்ககுடியிருப்பு பிரதான
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரனை காப்பாற்ற வந்த சி.என்.எஸ் 1 என்ற கப்பல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 2009 ஆம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*