இலங்கை வருகிறது ஐக்கிய நாடுகள் சபைச் செயற்குழு

சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுவதற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபைக் செயற்குழுவின் மூவர் அடங்கிய குழு ஒன்று இலங்கை வரவுள்ளது.

ஜோஸ் அன்டோனியோ குவேரா பேர்மடஸ், லீ தூமேய் மற்றும் எலினா ஸ்டெயிநெர்டே ஆகிய மூன்று பேரே இலங்கை வரவுள்ளனர்.

டிசம்வர் மாதம் 4ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் இந்த குழு இலங்கையில் தங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் இலங்கையில் உள்ள சிறைச்சாலை, காவற்துறை நிலையங்கள், ஏதிலிகள் முகாம் போன்ற மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வுகளை நடத்தவுள்ளனர்.

அத்துடன் கொழும்பிலும், வடமத்திய, வடக்கு கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளனர்.

தங்களது ஆய்வு குறித்து அவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதி விசேட செய்தியாளர் சந்திப்புஒன்றை நடத்தி விளக்கமளிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்