அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் – மைத்திரி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தொழில் திணைக்களத்தின் 191 புதிய உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

”இயற்கை அனர்த்தத்தினால் சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் சொத்துக்களையும் இழந்துள்ளனர். அவர்களின் துன்பத்துடன் நாம் ஒன்றிணைய வேண்டும். அவர்களுக்கான நலன்புரி விடயங்களில் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

தேசிய அனர்த்தம் ஏற்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு சேவை, அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் முன்னெடுத்த சேவைகளை நாம் பாராட்ட வேண்டும்,” என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தொடர்டர்புடைய செய்திகள்
அரசாங்கத்திலிருந்து வெளியேறி பாராளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படுவதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஶ்ரீ
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் காணப்பட்ட ஸ்ரீலங்கா ஐனாதிபதி மைதிரிபால சிறிசேனவின்
அதிபர் பதவியை விட்டு இன்று கூட விலகிச் செல்லத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமது

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*