சீரற்ற காலை நிலை தொடர்கிறது : 11 பேர் பலி – 5பேரை காணவில்லை : 77,481 பேர் பாதிப்பு

சீரற்ற கால நிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் 15 மாவட்டங்களில் 23,884 குடும்பங்களை சேர்ந்த 77481 பேர் பாதிக்கப்பட்டுளள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த அனர்த்தங்களில் சிக்கி 11 பேர் உயரிழந்துடன் 5 பேர் காணாமல் போயுள்ளனர்.
கொழும்பு , கம்பஹா , களுத்துறை , காலி , அம்பாந்தோட்டை , மத்தறை ,மொனாராகல , பதுளை , புத்தளம் , குருநாகல் , நுவரெலியா , கண்டி ,மாத்தளை கேகாலை மற்றும் இரத்தினப்புரி மாவட்டங்களிலுமே இவ்வாறாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் நேற்று மாலை வரை சேகரிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக 481 வீடுகள் முழுமையாகவும் 15780 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் இதனால் பாதிக்கப்பட்ட 961 குடும்பங்களை சேர்ந்த 3509 பேர் 30 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
லண்டனில் சிறீலங்கா தூதரகத்திற்கு முன்னால் அகிம்சை வழியில் போராடிய தமிழ் மக்களை 'கழுத்தை வெட்டுவேன்' என்று சைகை காட்டி எச்சரித்து
“யாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது எமது கட்சி முதன்மை வேட்பாளர் வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார்” என தமிழ்த் தேசிய
பிரித்தானியாவின் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரி தமிழ் தகவல் நடுவத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள், பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுடன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*