இந்த அரசாங்கத்தினால் எங்களை அசைக்க முடியாது : மகிந்த

பிரபாகரனுக்கே அஞ்சாத நாங்கள் இந்த அரசாங்கத்திற்கா அஞ்சப் போகின்றோம். என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்‌ஷ தற்போதைய ஆட்சியை தோற்கடித்து வீட்டு விரட்டும் காலம் உருவாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”அன்று பிள்ளைகள் கட்சியை கைவிட்டு செல்லும் போது சுதந்திரக் கட்சியுடன் இருந்து கட்சியை பாதுகாத்தவர்கள் நாங்களே. கட்சி என்பது கை சின்னமோ , டாலி வீதி அலுவலகமோ அல்ல. கொள்கையிலேயே கட்சி தங்கியுள்ளது. நாங்கள் அந்த கொள்கையிலிருந்து மாறாது இருக்கின்றோம். இதன்படியே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். எமக்கு யாருடனும் தனிப்பட்ட பிரச்சினையும் கிடையாது. எங்களுக்கு இடையூறுகளை செய்தமையே இந்த நிலைமைக்கு காரணம். எவ்வாறாயினும் எங்களை கீழே வீழ்த்த முடியாது. அந்த காலம் முடிந்துவிட்டது. அன்று பிரபாகரனுக்கே பயந்து போகாத நாங்கள். இவர்களுக்கு பயந்து போவோமா. இல்லவே இல்லை. இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும். என்பதே எமது கோரிக்கையாக இருக்கின்றது.” என அவர் தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்