ஜெ.தீபாவின் வேட்புமனு நிராகரிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுசாமியால் மேற்படி வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுவில் படிவம் 26 ஐ முழுமையாக நிரப்பாத காரணத்தினால் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வேட்புமனுவில் சொத்துக்கள் மற்றும் வங்கிக்கணக்குகள் தொடர்பான முறையான தகவல்கள் பூர்த்திசெய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஜெ.தீபா நேற்றையதினம் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழகம் முழுவதும்
இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கௌரவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்
விஷாலும் தனிக்கட்சி துவங்கும் ஐடியாவில் உள்ளாராம். பல காலமாக இழுத்தடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வழியாக தனிக்கட்சி துவங்கி

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*