உள்ளூராட்சி மன்ற தேர்தல்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் போட்டி

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்து தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகின்ற நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் இணைந்து தேர்தல் கூட்டு ஒன்றை உருவாக்கியிந்தன.

எனினும் தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் இணைத்து போட்டியிட ஈ.பி.ஆர்.எல்.எவ் தீர்மானித்ததை அடுத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டு முறிவடைந்தது.

இந்நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது அமைப்புக்களை இணைத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கூறியுள்ளார்.

இவ்வாறிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள புளொட் மற்றும் ரெலோ அமைப்புக்களும் புதிதாக கூட்டமைக்க உள்ளதாக தெரியவருகின்றது.

About சாதுரியன்

மறுமொழி இடவும்