உருவாகிறது தமிழ்த் தேசியப் பேரவை? எனும் பொதுக்கூட்டணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து தமிழ்த் தேசிய பேரவை என்ற பெயரில் ”சைக்கிள்” சின்னத்தில் புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வடகிழக்கில் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு ஈடாக தமிழ்த் தேசிய பேரவையும் தேர்தல் களத்தை சந்திக்கவுள்ளது.

இதனிடையே நாளை தமிழ்த் தேசிய பேரவை தொடர்பிலான அறிவிப்பு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.முன்னதாக ஈபிஆர்எல்எவ் உடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்படுத்திக்கொள்ள திட்டமிட்டிருந்த கூட்டு முடக்கமுற்றுள்ள நிலையில் புதிய கூட்டு பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்