உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியது!

உதயசூரியன் சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள புதிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக இன்று காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் மற்றும் வலிகிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர் அ. ஆனந்தராஜ் உள்ளிட்டவர்கள் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.

குறித்த புதிய கூட்டமைப்பில் ஈபிஆர்எல்எவ் சுரேஷ் அணி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஜனநாயக தமிழரசுக்கட்சி ஆகியன அங்கம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ரெலோ கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில்
பலம் மிக்கவர்களாக பெண்கள் மாறுவதன் மூலமே பெண்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை வெற்றிகொள்ள முடியும் என்று, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார
கிளிநொச்சி – பளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியின் ஒரு பகுதி இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*