யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்திலேயே கட்டுப்பணத்தை இன்று மாலை 2.00 மணிக்கு செலுத்தியுள்ளனர்.

அக்கட்சியின் உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் கட்டுப்பணம்செலுத்தப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணி உள்ளிட்ட சில கட்சிகளும் பொது அமைப்புக்களும் இணைந்து தமிழ்த் தேசிய பேரவை எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள புதியதொரு கூட்டமைப்பாகவே தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சின்னமான சைக்கில் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்திய நிலையிலேயே இன்று யாழ் மாவட்டம் முழுவதும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்