அரசியல் கைதிகளை விடுவிக்க கூறி யாழ் பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை அறிந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென யாழ் பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

இன்று காலை இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

முன்னிலை சோசலியக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஆட்சி காலத்தில் சமூக செயற்பாட்டாளர்களாக இருந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோருடைய வழக்கு இன்று யாழ்.நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு முடிவடைந்த பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது.

பட உதவி ஹம்சன்

About சாதுரியன்

மறுமொழி இடவும்