கூட்டமைப்புக்குள் பிளவு இல்லை என்கிறார் விக்னேஸ்வரன்

தமிழ்தேசிய கூட்டமைப்பு பிளவு படவில்லை. பிளவுபட்டவர்கள் அனைவரும் திரும்பி வந்துவிடுவார்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுக நாவலர் மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சரிடம் தமிழ்தே சிய கூட்டமைப்பின் பிளவு நிலை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் கூறுகையில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் பிளவுகள் இல்லை. பிரிந்தவர்கள் அனைவரும் திரும்பி வந்து விடுவார்கள் என கூறினார். எனினும் விரிவாக கருத்துக்களை கூற முதலமைச்சர் மறுத்துவிட்டார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்