யாழ்.பல்கலைக்கழக சட்ட பீடத்துக்கு சிங்கள மாணவர்கள் அதிகளவில் சேர்ப்பு!

யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் எட்டாவது பிரிவுக்கு, பெரும்பான்மையாக சிங்கள மாணவர்களே உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழா, கடந்தவாரம் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

இதில், சட்டபீடத்தில் கற்கையை முடித்த 60 பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியேறினார். இவர்களில் 24 பேர் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மாணவர்களாவர்.

யாழ். பல்கலைக்கழக சட்ட பீடம் ஆரம்பிக்கப்பட்டு முதல் ஐந்து பிரிவுகளிலும் தென்பகுதி சிங்கள மாணவர்கள் இணைந்து கொள்ளவில்லை.

எனினும், அண்மைய ஆண்டுகளில் திடீரென சட்ட பீடத்துக்குள் அதிகளவு சிங்கள மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு வருகின்றனர்.

சட்டபீடத்தின் எட்டாவது பிரிவில் சிங்கள மாணவர்களே அதிகளவில் கற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்