ரெலோவின் உறுப்பினர் உதய சூரியன் சின்னத்துக்கு தாவினார்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ரெலோ கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பில் ரெலோ கட்சியின் குறித்த அமைப்பாளர் கிளிநொச்சியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்விடயம் தொடர்பில் வெளிப்படுத்தினார்.

இதேவேளை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நடத்தப்படவுள்ளதாக கூறப்படும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் நாடெங்கிலுமுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களூடாக கட்சிகள் கட்டுப்பணம் செலுத்திவருகின்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்