கூட்டமைப்புக்குள் இடமில்லை! தனித்து போட்டியிடுகிறது வரதர் அணி!

வர­த­ரா­ஜப் பெரு­மாள் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர். எல். எவ். வரதர் அணி சாவ­கச்­சேரி நக­ர­ச­பைத் தேர்­த­லில் தனித்­துப் போட்­டி­யி­டு­வ­தற்கு நேற்­றுக் கட்­டுப்­ப­ணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் உள்ள தேர்­தல் பணி­ய­கத்­தில், நேற்­றுப் பிற்­ப­கல் அ.வர­த­ரா­ஜப்­பெ­ரு­மாள் மற்­றும் சுகு சிறி­த­ரன் ஆகி­யோர் கட்­டுப்­ப­ணத்­தைச் செலுத்­தி­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பில் பத்­ம­நாபா ஈ.பி.ஆர்.எல்.எவ். இணைத்­துக்­கொள்­ளப்­பட உள்­ள­தா­க­வும், உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கூட்­ட­மைப் பு­டன் இணைந்து போட்­டி­யி­ட­வுள்­ள­தா­க­வும், தக­வல்­கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.
ஆனாலும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பில் இந்­தக் கட்­சியை இணைத் துக் கொள்­வது தொடர்­பாக கூட்­ட­மைப்­புத் தலைமை இன்­ன­மும் எந்த முடி­வை­யும் அறி­விக்­காத நிலை­யில், தனித்­துப் போட்­டி­யிட முடிவு செய்­துள்­ள­தாக, பத்­ம­நாபா ஈ.பி.ஆர்.எல்.எவ். தெரி­வித்­துள்­ளது.

முதற்­கட்­ட­மாக சாவ­கச்­சேரி நக­ர­ச­பைக்கு இந்­தக் கட்சி சார்­பில் கட்­டுப்­ப­ணம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

குறித்த அணி தமது கட்சியின் பெயரை தமிழ் சமூக ஜன­நா­யகக் கட்சி என்று மாற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்