கிழக்கில் தமிழரசு 02, காங்கிரஸ் 01, கூட்டணி 01 சபைகளை இழந்த பரிதாபம்!!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் தரப்பில் போட்டியிடுகின்ற மூன்று பிரதான கட்சிகளின் அக்கறையற்ற செயலினால் கிழக்கு மாகாணத்தில் நான்கு சபைகளில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

கிழக்கில் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுடைய நான்கு சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை மாவட்­டத்­தில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் இரண்டு வேட்­பு­ம­னுக்­கள் நேற்று நிரா­க­ரிக்­கப்­பட்­டன.

இத­னால் அந்த இரண்டு சபை­க­ளை­யும் அந்­தக் கட்சி இழந்­துள்­ளது. அந்­தச் சபை­க­ளுக்கு வேட்­பு­ம­னுக்­க­ளைத் தாக்­கல் செய்­யும் பொறுப்பு ரெலோ கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு அவரே கட்­சி­யின் முக­வ­ரா­க­வும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

அவ­ரது தவறு கார­ண­மா­கவே அந்த இரு வேட்­பு­ம­னுக்­க­ளும் நிரா­க­ரிக்­கப்­பட்­டன என்று தேர்­தல் திணைக்­க­ளம் அறி­வித்­தது.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­னது தவிர தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­க­ளி­னது வேட்­பு­ம­னுக்­க­ளும் கிழக்கு மாகா­ணத்­தில் நேற்று நிரா­க­ரிக்­கப்­பட்­டன.

முத­லில் தேர்­தல் அறி­விக்­கப்­பட்ட 93 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான வேட்­பு­ம­னுத் தாக்­கல் நேற்று மதி­யத்­து­டன் நிறை­வுக்கு வந்­தது. பி.ப. 1.30 மணிக்கு ஒவ்­வொரு உள்­ளூ­ராட்சி மன்­றத்­துக்­கும் தாக்­கல் செய்­யப்­பட்ட வேட்­பு­ம­னுக்­க­ளில் ஏற்­றுக் கொள்­ளப்­பட்ட மற்­றும் நிரா­க­ரிக்­கப்­பட்ட வேட்­பு­ம­னுக்­கள் தொடர்­பில் அறி­விக்­கப்­பட்­டது.

அம்­பாறை மாவட்­டத்­தின் ஆலை­ய­டி­வேம்பு மற்­றும் சம்­மாந்­துறை பிர­தேச சபை­க­ளுக்கு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பில் தாக்­கல் செய்­யப்­பட்ட வேட்­பு­ம­னுக்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டன.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தின் வாழைச்­சே­னைப் பிர­தேச சபைக்கு தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி தாக்­கல் செய்த வேட்­பு­மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தின் பட்­டி­ன­மும் சூழ­லும் நகர சபைக்கு அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் தாக்­கல் செய்த வேட்­பு­ம­னு­வும் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

கிழக்கு மாகா­ணத்­தின் மூன்று மாவட்­டங்­க­ளி­லும், முக்­கிய மூன்று தமிழ்க் கட்­சி­க­ளி­னது வேட்­பு­ம­னுக்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. தமிழ் அர­சுக் கட்­சி­யின் வேட்­பு­ம­னுக்­கள் கட்­சி­யின் முக­வர் இல்­லாது தலைமை வேட்­பா­ள­ரி­னால் தாக்­கல் செய்­யப்­பட்­ட­மை­யா­லேயே நிரா­க­ரிக்­கப்­பட்­டன என்று தெரி­வத்­தாட்சி அலு­வ­லர் அறி­வித்­தார்.

இந்­தச் சபை­க­ளுக்­கான கட்­சி­யின் முக­வ­ராக ரெலோ கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரும் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கவீந்­தி­ரன் கோடீஸ்­வ­ரன் கட்­சிச் செய­லா­ள­ரால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

அவர் இந்த இரு சபை­க­ளுக்­கும் வேட்­பு­ம­னு­வைத் தாக்­கல் செய்­வ­தற்கு தலைமை வேட்­பா­ளர்­களை அனுப்பி வைத்­து­விட்டு மற்­றைய இரு சபை­க­ளுக்­கும் வேட்­பு­ம­னுக்­க­ளைத் தாக்­கல் செய்­யத் தான் நேரில் சென்­றி­ருந்­தார். ஆலை­ய­டி­வேம்பு மற்­றும் சம்­பாந்­துறை சபை­க­ளில் இந்த விட­யம் சுட்­டிக்­காட்­டப்­பட்டு ஆட்­சே­பனை எழுப்­பப்­பட்­டதை அடுத்து அந்த வேட்­பு­ம­னுக்­களை நிரா­க­ரிப்­ப­தா­கத் தெரி­வத்­தாட்சி அலு­வ­லர் தெரிவித்திருக்கின்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்